வேலைக்கு பஞ்சமில்லாத வேதியியல் துறை

By ஜெயபிரகாஷ் காந்தி

பி.எஸ்சி. வேதியியல் படித்தால் பணி கிடைப்பது அரிது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இது முற்றிலும் தவறு. வேதியியல் சார்ந்துதான் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்குகின்றன. அங்கெல்லாம் வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

எம்.எஸ்சி. மேற்படிப்புகளாக அனாலிடிக்கல் கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, நான்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி, பிசிக்கல் கெமிஸ்ட்ரி, கம்ப்யூடேஷன் கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, என்வைரான்மென்டல் கெமிஸ்ட்ரி, ஃபார்மசூடிக்கல் கெமிஸ்ட்ரி ஆகியவை உள்ளன. விஐடி, எஸ்ஆர்எம், ராமச்சந்திரா உள்ளிட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் லயோலா, எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், பிரசிடென்ஸி உள்ளிட்ட கல்லூரிகளில் மேற்கண்ட படிப்புகள் உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. அனாலிடிக்கல், ஆர்கானிக், நான்-ஆர்கானிக், பிசிக்கல் கெமிஸ்ட்ரி, பாலிமர் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவற்றைப் படிக்கலாம்.

எம்.எஸ்சி. பயோ மெடிக்கல், எம்.எஸ்சி. மெடிக்கல் லேப் டெக்னாலஜி மூலம் மருத்துவத் துறை சார்ந்த பணி வாய்ப்புகளைப் பெறலாம். பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ. கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. - பிஎச்.டி. இணைந்த படிப்பு உள்ளது. எஸ்.எஸ். போஸ் நேஷனல் சென்டர் ஃபார் பேஸிக் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. - பிஎச்.டி. இணைந்த கெமிக்கல் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை வழங்குகின்றனர்.

கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. இன் அப்ளைடு கெமிக்கல் அண்ட் ஹைட்ரோ கெமிஸ்ட்ரி பட்ட மேற்படிப்பை வழங்குகின்றனர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. இன் கெமிக்கல் சயின்ஸ் பட்ட மேற்படிப்பு உள்ளது. கொச்சினில் உள்ள அம்ரித்தா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனம், மணிப்பால் பல்கலைக்கழகம் ஆகியவை எம்.எஸ்சி. மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி பாடத் திட்டத்தை அளிக்கின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. இன் நியூக்ளியர் கெமிஸ்ட்ரி, மெட்டீரியல் புரடக்‌ஷன் அண்ட் கரோஷன் இன்ஜினீயரிங் உள்ளது.

இவை தவிர, பி.எஸ்சி. முடித்ததும் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளான டெக்ஸ்டைல்ஸ், ஃபுட் புராசஸிங், கரோலின், பயோ ஃபெர்டிலைசர் உள்ளிட்டவை படிப்பதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பு பெறலாம். கொச்சினில் உள்ள குருநானக் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. ஆயில் சோப் அண்ட் டிடர்ஜென்ட் பட்ட மேற்படிப்பு உள்ளது. சோப்பு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றத் தேவையான படிப்பு இது.

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி சார்ந்த பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள், JAM நுழைவுத் தேர்வு எழுதி விரும்பிய பாடப் பிரிவில் சேரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்