வேலை வேண்டுமா? - அணுசக்தி துறைப் பணி

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

இந்திய அணுசக்தித் துறையின் கொள்முதல், பண்டப் பிரிவில் மேல்நிலை எழுத்தர், இளநிலை கொள்முதல் உதவியாளர், இளநிலை பண்டக் காப்பாளர் ஆகிய பதவிகளில் 34 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி உரிய தளர்வு உண்டு. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் கூடுதலாக ஆங்கிலத் தட்டச்சு (நிமிடத்துக்கு 30 சொற்கள்), கணினியில் டேட்டா பதிவு செய்யும் அனுபவம், பொருட்கள் மேலாண்மையில் பட்டயப் படிப்பு ஆகியவை இருந்தால் விரும்பத்தக்க தகுதிகளாகக்கொள்ளப்படும்.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வானது இரு நிலைகளாக நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். இதில் வெற்றிபெறுவோர் 2-வது கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் விரிவாக விடையளிக்க வேண்டும். இத்தேர்வு ஆங்கில அறிவைச் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். மதிப்பெண் 100. தேர்வு 3 மணி நடைபெறும். 2-வது கட்டத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

தகுதியுடைய பட்டதாரிகள் www.dpsdae.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்திச் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்