கேள்வி நேரம் 27: நம் காலத்தின் மாமேதை

By ஆதி வள்ளியப்பன்

1. மறைந்த மாபெரும் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் 1942 ஜனவரி 8 அன்று பிறந்தார். 2018 மார்ச் 14 அன்று மறைந்தார். ஆச்சரியப்படும் பல விஷயங்களைக் கண்டறிந்த அவருடைய பிறந்த நாள், இறந்த நாள் இரண்டுக்கும் வேறு இரண்டு முக்கிய விஞ்ஞானிகளின் பிறந்த நாள், இறந்த நாளுக்கும் அபூர்வமான ஒற்றுமை உண்டு. அவை என்ன?

 

2. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் வடக்குப் பகுதியில் ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்தார். உலக அளவில் உயர்கல்விக்காகப் பெருமை பெற்ற ஆக்ஸ்போர்டுதான் அந்தப் பகுதி. ஹாக்கிங் பிறப்பதற்கு முன் அந்தப் பகுதியில் வீடு எடுத்துத் தங்குவதற்கு அவருடைய பெற்றோர் முடிவெடுத்ததற்கான காரணம் என்ன?

 

3. ஹாக்கிங்கின் குழந்தைப் பருவத்தில் அவருடைய குடும்பத்தினர் சிக்கனமாக வாழ வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால், டாக்சி ஒன்றின் மறுவடிவம் செய்யப்பட்ட சிறு குடியிருப்பில் சில காலம் வாழ்ந்திருக்கின்றனர். இதேபோல் பிற்காலத்தில் ஹாக்கிங்குக்கு ஏற்பட்ட நோயால் திருமணத்துக்குப் பிறகு வீடு தேடுவதில் ஏற்பட்ட நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என்ன?

 

4. தொடக்கப் பள்ளியில் மற்ற குழந்தைகளைப் போல் வாசிக்கும் திறனை ஹாக்கிங்கால் வளர்த்துக்கொள்ள முடியாமல் இருந்தது. பிற்காலத்தில் தான் பிறந்த பகுதியில் இருந்த உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தார். 1977-ல் அவர் முதலில் பேராசிரியர் பணிபுரிந்த பல்கலைக்கழகமும் உலகப் புகழ்பெற்றதுதான். அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன, எந்தத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்?

 

5. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான ‘லூகாசியன் இருக்கை’ என்ற மதிப்புமிக்கப் பேராசிரியர் பணியிடம் 1663-ல் உருவாக்கப்பட்டது. 1669-ல் இந்தப் பேராசிரியர் இருக்கையில் பணியமர்த்தப்பட்டவர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன். ஹாக்கிங்குக்கும் லூகாசியன் இருக்கைக்குமான தொடர்பு என்ன?

 

6. ‘A Brief History of Time', 'Black Holes and Baby Universes and Other Essays’, ‘The Universe in a Nutshell’, ‘The Grand Design’ உள்ளிட்ட புத்தகங்கள் அவர் எழுதியதில் முக்கியமானவை. இதில் ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ நூலை அடிப்படையாகக்கொண்டு 1992-ல் எரோல் மோரிஸ் ஆவணப் படம் ஒன்றை இயக்கினார். இந்தப் புத்தகம் எத்தனை வாரங்களுக்கு ‘லண்டன் சண்டே டைம்ஸ்’ இதழின் அதிகம் விற்பனையான புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தது? இந்தச் சாதனைக்காக 1998 கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்நூல் இடம்பெற்றது.

 

7. ஸ்டீவன் ஹாக்கிங் புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களை எழுதியிருந்தாலும், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான பிரபஞ்சம் குறித்த சாகசப் புத்தக வரிசையில் முதல் புத்தகம் ‘பிரபஞ்சத்துக்கான ஜார்ஜின் ரகசியச் சாவி’ (George’s Secret Key to the Universe). இந்தப் புத்தக வரிசையை யாருடன் இணைந்து அவர் எழுதினார்?

 

8. புகழ்பெற்ற இசைக் கலைஞர் மொசார்ட் ‘ஒரு மொத்த சிம்பனி இசைக்கோவையை தன் மூளைக்குள்ளேயே இசையமைத்து முடித்துவிடுவ’தற்கு இணையாக ஹாக்கிங்கின் சாதனைகளைச் சொல்லலாம் என்று இயற்பியலாளர் வெர்னர் இஸ்ரேல் ஒரு முறை பாராட்டியுள்ளார். இதேபோன்று, ஹாக்கிங்குடனான தனது வாழ்க்கை தொடர்பாக ஹாக்கிங்கின் முதல் மனைவி ஜேன் வைல்ட் இசை தொடர்புடைய ஒரு தலைப்பில் புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதன் பெயர் என்ன?

 

9. கல்லூரியில் படித்த காலத்தில் துடுப்புப் படகுக் குழுவில் படகோட்டி மேற்பார்வையாளராக ஹாக்கிங் செயல்பட்டுள்ளார். பிற்காலத்தில் ‘ஆமியோடிராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோசிஸ்’ என்னும் நோயின் தாக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்பட்டார். அந்த நோய்க்கு ‘லூ கெரிக் நோய்’என்பது இன்னொரு பெயர். இந்த நோயின் தாக்கத்துக்கு இடையே 1960-களில் ஊன்றுகோல்களைப் பயன்படுத்தியும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டும் அவர் பார்த்த வேலை எது?

 

10. பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் கௌரவத் தோற்றத்தில் ஸ்டீவன் ஹாக்கிங் தோன்றியுள்ளார். ‘தி சிம்ப்சன்ஸ்’, ‘பிக் பேங் தியரி’, ‘ஸ்டார் டிரெக்’போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. புகழ்பெற்ற ‘பிங்க் பிளாய்ட்’ இசைக் குழுவின் ‘கீப் டாக்கிங்’ பாடலில் அவருடைய குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹாக்கிங்கின் வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘The Theory of Everything’. அதில் ஹாக்கிங்கின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் எடி ரெட்மேய்ன் மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றார். அந்த விருதுகள் என்னென்ன?

விடைகள்:

1. கலிலியோவின் 300-வது நினைவு நாளின்போது ஹாக்கிங் பிறந்தார், ஐன்ஸ்டைனின் 121-வது பிறந்த நாளின்போது ஹாக்கிங் மறைந்தார்.

2. இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்த நேரத்தில்தான் ஹாக்கிங்கின் பெற்றோர் திருமணம்செய்துகொண்டனர். போரிலிருந்து தப்பிக்க ஆக்ஸ்போர்டு பகுதியே பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

3. கல்லூரிப் பணிக்குச் செல்வதற்கு நடக்கும் தொலைவில் வீடு பார்ப்பது கடினமாக இருந்தது.

4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கணிதத் துறை

5. 1979-ல் லூகாசியன் இருக்கையில் ஹாக்கிங் நியமிக்கப்பட்டார்

6. 237 வாரங்களுக்கு, கிட்டத்தட்ட நான்கரை வருடங்களுக்கு மேல்.

7. தன் மகள் லூசியுடன்

8. Music to Move the Stars

9. பேராசிரியர் பணியில் பாடமெடுத்தல்.

10. ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

26 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்