ஆங்கில​ம் அறிவோமே 266: ஒருவனைப் போல வேடமிட்டிருக்கும் மற்றொருவன்!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

Ostracise என்ற சொல்லுக் கும் நெருப்புக் கோழிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

“Hip hop என்ற நடன வகையில் hop என்றால் குதிப்பது என்பது புரிகிறது. Hip என்றால் என்ன,  இடுப்பு என்று பொருள் கொள்ளலாமா?”

வாசகரே, Hip என்பதற்கு இன்னொரு பொருள் உண்டு.  பிரபலமான, நாகரிகமான, friendly ஆன என்ற பொருள்.

Hip hop என்பது நடனம் அல்ல.  ஒருவிதப் பிரபல இசை வடிவம்.  அமெரிக்காவிலுள்ள கறுப்பின மக்களால் பிரபலமடைந்த இசை இது.

இடுப்பு என்ற பொருளில் நீங்கள் hip-ஐக் குறிப்பிட்டீர்கள்.  Pelvis என்பது இடுப்புக்கூடு அல்லது இடுப்பெலும்பைக் குறிக்கிறது.  Elvis Presley என்ற பிரபலப் பாடகர் பாடும்போது தன் Pelvis-ஐ நான்கு திசைகளிலும் சுழற்றியபடி பாடுவார்.  இதனால் அவர் Elvis the Pelvis என்றே அழைக்கப்பட்டார்.

‘கேட்டாரே ஒரு கேள்வி’ நண்பரே, முதலில் கொஞ்சம் அறிவியல். ‘எதிரிகள் வந்தால் மண்ணில் தலையைப் புதைத்துக் கொள்கிறது நெருப்புக்கோழி.  அதாவது  பிரச்சினை எதுவும் இல்லாத மாதிரித் தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் அசட்டு நடவடிக்கை இது’ என்று கூறப்படுவதற்கு ஆதாரமில்லை. 

நெருப்புக்கோழி மண்ணில் துளையிட்டுத் தன் முட்டைகளைப் பாதுகாக்கிறது.  அவை பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை அவ்வப்போது சரிபார்க்கிறது அவ்வளவுதான்.  மற்றபடி சிங்கத்தைக்கூடத் துவம்சம் செய்யும் அளவுக்கு நெருப்புக்கோழியின் கால்கள் வலிமையானவை.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். நெருப்புக்கோழியை உணர்த்தும் ostrich என்பதற்கும், ostracise (இதை ஆஸ்ட்ரஸைஸ் என்று உச்சரிக்க வேண்டும்) என்பதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. (அமெரிக்காவில் ostracize)

Ortracise என்றால் ஒரு குழுவிலிருந்து தனிமைப்படுத்துவது என்று பொருள்.  சில கிராமப் பஞ்சாயத்துகளில் ‘ஊரை விட்டே விலக்கி வைப்பார்களே’ அதுகூட ostracise செய்வதுதான். முன்பெல்லாம் நாடு கடத்துவதைக் கூட இந்தச் சொல்லால் குறிப்பிட்டார்கள். பதினேழாம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் ‘Ostrakizein’ என்ற சொல் இருந்தது.  யார் யாரை ஒதுக்கிவைக்கலாம் என்பதை எழுதி வைக்கும் ஒரு பெரிய ஓடு ஒன்றை இது குறித்தது.

Pleonastic என்றால் என்ன?

தேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துவதை இப்படிக் குறிப்பிடுவார்கள். எடுத்துக்காட்டு, From my past experience என்பது.  இதில் past என்பது வேண்டாத சொல். எனவே இந்த phrase ஒரு pleonastic பயன்பாடு கொண்டது.

“ஒரு பொருள் cheap-ஆக இருக் கிறது என்றாலோ, inexpensive ஆக இருக்கிறது என்றாலோ இரண்டும் ஒரே பொருளைத்தான் உணர்த்து கின்றனவா,  ஒருவேளை Inexpensive என்பதைவிட விலை குறைவானதா cheap என்பது?”

அப்படியல்ல.  குறைந்த விலை கொண்டது என்பதையே இரண்டும் குறிக்கின்றன.  ஆனால், cheap எனும்போது அது விலைக் குறைவை மட்டுமல்ல தரக்குறைவையும் குறிக்கிறது.

தவிர inexpensive என்பது பணம் தொடர்பானவை மட்டுமே  - குறைந்த விலை. ஆனால், cheap என்பது கேவலமான எதையும் விவரிக்கக் கூடும்.  Cheap behaviour, cheap attitude.

போட்டியில் கேட்டுவிட்டால்?

The Russians found him to be an   ________  and identified him.

Imposter

Informer

Archer

Angel

Angel என்பது தேவதையைக் குறிக்கும் சொல்.  வாக்கியத்தில் ‘him’ என்று உள்ளதால் Angel-ஐ விட்டுவிடலாம்.

Informer என்றால் ஒற்றன்.  Archer என்றால் வில்வித்தையில் கைதேர்ந்தவன். இந்த இரண்டு சொற்களில் எதை நிரப்பினாலும் வாக்கியத்தின் இலக்கணம் சரியாகத்தான் இருக்கிறது.

ஆனால், imposter என்றால் ஒருவனைப் போல வேடமிட்டிருக்கும் மற்றொருவன்.  இப்படிப்பட்ட ஒருவனின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடிப்பது என்பது மேலும் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே,  The Russians found him to be an imposter and identified him என்பதே சரியான வாக்கியம்.

சிப்ஸ்

# Junk food என்பதன் பொருள் என்ன?

சத்து இல்லாத உணவு.

# இருசக்கர வாகனம் ரிப்பேர் செய்யும் கடைகளை Mechanic Shop என்கிறோம். ஆகாய விமானங்களை நிறுத்தி வைக்கும், ரிப்பேர் செய்யும் கடைகளை எப்படிக் குறிப்பிடுவார்கள்?

Hangar

# Kung Fu என்பதைச் சிலர் கங்ஃபூ என்று உச்சரிக்கிறார்களே?

குங்ஃபூ என்பதுதான் சரியான உச்சரிப்பு.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்