ஆங்கில​ம் அறிவோமே 263: பொதுவாகவும் சொல்லலாமே!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

“முடிந்தவரை சொல்லில் ஆண்-பெண் பேதம் காட்டக் கூடாது என்று கூறி Chairman என்பதை Chairperson என்று குறிப்பிடலாம் என இந்தப் பகுதியில் எழுதியிருந்தீர்கள். Tom, Dick and Harry என்று ஒரு பயன்பாடு உண்டு. இதன் பெண்பாலாக எந்த மூன்று பெண் பெயர்களைக் குறிப்பிடலாம்?”

‘Isle என்றால் island என்பதன் சுருக்கம் என்பது புரிகிறது. Aisle என்றால் என்ன?’

வாசகரே, நீங்கள் திரையரங்குக்குள் நுழைகிறீர்கள். நடுவிலுள்ள பாதையில் நடந்தபடி உங்கள் வரிசை எது என்று தேடுகிறீர்கள். உங்களுக்கு இரு பக்கமும் வரிசைகள் இரண்டாகப் பிரிந்து காட்சி தருகின்றன. நீங்கள் இப்போது நடந்து செல்லும் பாதைதான் ‘aisle’.

திரையரங்கு மட்டுமல்ல விமானம், மாதாகோவில் இப்படி எதுவாக இருந்தாலும் வரிசைகளைப் பிரிக்கும் பாதையை aisle என்பார்கள். இதனால்தான் இந்தப் பாதைக்கு அருகே உள்ள இருக்கைகளை aisle seat என்கிறோம் (corner seat என்பதற்கு நேரெதிரானது). Aisle என்பதற்கு இணையான சொற்களாக passage, path, allvy ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

 அப்புறம் இன்னொரு விளக்கம். Isle என்பது தீவாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. முப்புறமும் நீரினால் சூழப்பட்ட பகுதியையும் (அதாவது peninsula) குறிக்கும். பொதுவாக isle என்பது சிறிய அளவில் உள்ள பகுதியாகும்.

 ‘கேட்டாரே ஒரு கேள்வி’ நண்பரே, அது வேண்டாத வேலை. பொதுவான விஷயங்கள் தொடர்பான சொற்களில் gender வெளிப்பட வேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவுதான். அதற்காக ஆண் பெயர்களைப் பெண்ணின் பெயர்களாக மாற்ற வேண்டியதில்லை.

Tom, Dick and Harry என்பதற்குப் பதிலாக ‘any ordinary person’ என்று குறிப்பிட்டால் போதுமானது. I don’t care for the criticism by any ordinary person. Any ordinary person can even understand this.

“Pronoun மட்டும் இல்லை என்றால் வாக்கியங்கள் எல்லாம் கண்றாவியாக இருக்கும்” என்று ஒரு நண்பர் உரையாடலின்போது குறிப்பிட்டார். உண்மைதான். Dev brought Dev’s father, Dev’s sister and Dev’s friend to Dev’s office on the Cultural Day”.

His என்கிற pronoun-ஐப் பயன்படுத்தாததால் வாக்கியம் இப்படி அமைந்துவிட்டது. ஆனால், கார்ட்டூனில் இருப்பதுபோல ஆகிவிடக் கூடாது. ஒரு pronoun குழுப்பத்தைத் தரும் என்றால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.

கார்ட்டூன் பெண்மணி “If your baby has trouble digesting cow’s milk, boil the milk” என்று கூறியிருக்கலாம்.

It’s, its ஆகியவற்றுக் கிடையே உள்ள வேறுபாடுகளைக் குறிப்பதற்காகச் சில வாக்கியங்களை இப்பகுதியில் அளித்திருந்தேன். அதில் “according to me” என்ற பயன்பாடு தவறானது என்று வாசகர் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒருவிதத்தில் இது நியாயம்தான். “In my opinion” என்பதே சரியானதாக இருக்கும்.

ஆனாலும் ஒரு கேள்வி. நீங்கள் ஒரு திட்டத்தைக் கூறுகிறீர்கள். எதிராளி “According to whom?” என்று கேட்கிறார். அப்போது என்ன கூறுவீர்கள்?. “According to me” என்றுதானே கூற முடியும்.

“According to me” என்பது இலக்கணப்படி அமைந்துள்ளது. ஒரு phrase ஆக அர்த்தம் தருவதாகவும் இருக்கிறது. ஆனாலும், அதை மரபு சார்ந்த இலக்கியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மை.

தொடக்கம் இப்படித்தான்

“Don’t be a Silly Billy” என்று யாராவது திட்டிக் கேட்டிருப்பீர்கள். முட்டாளைக் குறிக்கும் சொல் இது. இதற்கு ஏன் Billy என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிட்டனின் அரசராக ஒரு காலகட்டத்தில் நான்காம் வில்லியம் இருந்தார். இவர் வெளிநாட்டினர் அத்தனை பேரையும் சந்தேகப்பட்டார்.

பொதுவாகத் திறமையற்றவர், கோமாளி என்று பெயரெடுத்தார். வில்லியம் என்பதைச் சுருக்கமாக Willy என்றும் Billy என்றும் கூறுவதுண்டு. இந்த மன்னரைக் குறிக்க Silly Billy என்று பலரும் குறிப்பிடத் தொடங்கினர். அதற்குப் பிறகு இந்தச் சொற்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் யாரையும் குறிக்கவும் பயன்படத் தொடங்கின.

பொதுவாக இது பன்மையைத்தான் குறிக்கப் பயன்படுகிறது. The Silly Billies in the Ministry என்பதுபோல.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்