இயர்புக் 2019: நம்பகத்தன்மை மிக்க தகவல் பொக்கிஷம்

By செய்திப்பிரிவு

இயர்புக் என்பது அகராதியைப் போன்றது. வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய எப்படி அகராதி ஒரு பொக்கிஷம்போல் பயன்படுகிறதோ, அதேபோல் தகவல்களுக்கு இயர்புக் பயன்படுகிறது. இன்றைய இளைஞர்கள் ஒரு தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால், அது உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 40 நொடிகளில் அவர்களது கவனம் சிதறிவிடுகிறது. ஒரு விஷயத்தைத் தேடும்போது, அது கிடைக்கத் தாமதமாகி கொஞ்சம் அயர்ச்சி ஏற்பட்டால் தேடுவதை விட்டுவிடுகிறார்கள்.

இளைஞர்களின் இந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி 'இந்து தமிழ்' இயர்புக் 2019 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தகவல்கள் உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் இந்த இயர்புக் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

தகவல்கள் மட்டுமில்லாமல் நிறைய சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. விரிவான கட்டுரைகள் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் நல்ல பயிற்சி அளிப்பதாகவும் இருக்கும். 'தி இந்து' என்றாலே நம்பகத்தன்மைதான். அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த இயர்புக்குக்கும் இது பொருந்தும். இன்றைய அவசியத் தேவை வெளிப்படைத்தன்மையும் நம்கபத்தன்மையும்தான். அதை இந்த இயர்புக் நிறைவேற்றியுள்ளது.

தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்ட விதமும் சிறப்பாக உள்ளது. போட்டித் தேர்வர்களுக்கு இன்று இணையத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. கூகுளில் தேடினால் ஆயிரக்கணக்கான சுட்டிகள் கிடைக்கின்றன. அவற்றில் எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் மாணவர்கள் குழம்பும் நிலை உள்ளது. அந்த வகையில் எந்தத் தகவலை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் போட்டித் தேர்வர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டு இந்த இயர்புக் உருவாக்கப்பட்டுள்ளது.

- ஆர். நடராஜ் ஐ.பி.எஸ்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://www.kamadenu.in/publications

SMS வழியே முன்பதிவு செய்ய: Y19 Name Location Pincode ஐ type செய்து 9773001174 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். முன்கூட்டியே பதிவுசெய்தால் தபால் செலவு ரூ.40/- இலவசம் முந்துங்கள் தபால் சலுகை 10-01-2019 வரை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்