ஆங்கில​ம் அறிவோமே 243: ரொம்ப நல்லது பண்ணிட்டே நல்லா இரு!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

Coldblooded murder என்கிறார்களே அது என்ன வகைக் கொலை? (இத்தனைக்கும் மனிதர்கள் coldblooded கூட அல்லவே!).

*********

Kidnap செய்வதற்கும், abduct செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்பது வாசகர் ஒருவரின் கேள்வி.

பணம் பெறுவதற்காக ஒருவரைக் கடத்திக்கொண்டு போனால் அவர் kidnap செய்யப்படுகிறார்.

கடத்தப்படுவதன் நோக்கம் அந்தரங்கமானது என்றால் அவர் abduct செய்யப்படுவார்.

Kidnapper, கடத்தப்படுபவரின் உறவின​ரைத் தொடர்பு கொண்டு ‘இவ்வளவு பணம் கொடுத்தால்தான் இவரை விடுவிப்பேன்’ என்பதுபோலப் பேசுவார்.

Abductor கடத்தப்பட்டவரின் உறவினரைத் தொடர்பு கொள்ள மாட்டார்.  அவர்களாகவேதான் தேடி வர வேண்டும்.

*********

‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகரே, murder  என்றாலே அது warmth (நெஞ்சில் ஈரம்) இல்லாத விஷயம்தானே! என்றாலும் coldblooded என்பதற்கு வேறொரு பொருள் உண்டு.  கொஞ்சம்கூட இரக்கமற்ற 

கு​ரூரமான என்று ஒரு பொருள் உண்டு.  Coldblooded murder-ல் ரத்தம் ‘குபுக்’கென்று வெளிவந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலையைத்தான் coldblooded murder என்பார்கள்.

*********

“How are you என்று கேட்டால் என்ன பதில் கூறுவது பொருத்தமானது?’’ என்று கேட்கிறார் வாசகர் ஒருவர்.

How are you என்றால் “Fine. Thanks’’ என்று கூற வேண்டும்.  இது பிரிட்டிஷ் ஆங்கிலம். 

அமெரிக்க ஆங்கிலத்தில் “How are you doing?” என்று கேட்பார்கள். “Great” என்று பதிலளிப்பது வழக்கம்.

ஆஸ்திரேலிய ஆங்கில​த்தில் “How are you go​ing?” என்பார்கள் (​எல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு? என்பது போல).   “Good. Thanks” என்பது அங்கு இயல்பாகக் கூறப்படும் பதில்.

english-2jpg100 

“He fell ill and became unconscious for a while thanks to the soft drink he drank the previous night.

She failed in exams thanks to her diversion in life after she fell in love.

“Can the word Thanks be used in a negative term?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்  வாசகர் ஒருவர்.

மேற்படி வாக்கியங்களில் thanks என்ற சொல்லின் பயன்பாடு அபத்தமாக இருக்கிறது என்று இந்த வாசகர் கருதுவதை உணர முடிகிறது.

Thanks என்பது இங்கே முரணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது – கார்ட்​டூனில் உள்ள ‘நல்ல குடும்பம்’ போல.  

நமக்கு இடைஞ்சல்களைச் செய்யும் ஒருவரை நேரில் பார்க்கும்போது பற்களைக் கடித்தபடி “எனக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டே.  நல்லா இரு’’ என்று சாபமிடுவோம் அல்லவா.  அதுபோலத்தான் thanks என்ற சொல் வாசகர் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

*********

போட்டியில் கேட்டுவிட்டால்?

During 1960s, conducting  banking transactions from home sounded

a)​ preposterous

b) prescient

c) preordained

d) ​pithy

e) ​problematic          

கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான ​பொருள் புரிந்துவிட்டாலே கோடிட்ட இட​த்தைச் சரியாக நிரப்பிவிடலாம்.  வீட்டிலிருந்தே வங்கிப் பரிவர்த்தனையைச் செய்யலாம் என்று 1960-க்களில் கூறினால் அப்போது அது எப்படி இருந்திருக்கும்.  இதற்கான சரியான சொல்தான் விடை.

Preposterous என்றால் அபத்தம் அல்லது நடக்க முடியாதது -  obscure.   Prescient என்றால் ஒன்றை முன்னதாகக் கூறுவது.   Preordained என்றால் விதிக்கப்பட்டது.  Pithy என்றால் சுருக்கமாக. ​

Problematic என்றால் பிரச்னைகளைக் கொண்ட.

இவற்றில் preposterous என்பது மிக அதிகப் பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால்,  1960-க்களில் வீட்டிலிருந்தே வங்கிப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஒருவர் கூறினால் “உளறல், அபத்தம், obscure, preposterous’’ என்பதில் ஒரு சொல்லை உதிர்க்கவே வாய்ப்பு அதிகம். எனவே During 1970s, conducting  banking transactions from home sounded preposterous.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

11 mins ago

க்ரைம்

17 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்