தொழில் தொடங்கலாம் வாங்க 52: ஏற்றுமதியிலும் ஏற்றம் காணலாம்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்துவருகிறேன். சிறுதொழில் தொடங்க ஆசை. படிக்கும்போதே தொடங்கலாமா அல்லது படித்து முடித்த பிறகு தொடங்கலாமா?

செ.ராஜபாண்டி, திண்டுக்கல் மாவட்டம்.

படித்து முடித்த பின் என்ன செய்யத் திட்டம் என்பதைப் பொறுத்துத்தான் தீர்மானிக்க முடியும். ஒரு வேலை அவசியம் என்றால், கவனம் சிதறாமல் படிப்பை முடித்து வேலைத் தேடலுக்குத் தயாராவது நல்லது. படிப்பு முடிந்தவுடனே கண்டிப்பாகத் தொழில் ஆரம்பிக்க வேண்டும், கண்டிப்பாக வேலை செய்யப்போவதில்லை என்றால் அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே செய்யலாம். அப்போதும் படிப்பை நல்ல படியாக முடிப்பது நல்லது. நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலுக்கேற்ப அதைத் தற்போதே தொடங்கலாமா என்று முடிவெடுங்கள். நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலிலேயே வேலை அனுபவம் பெறுவதும் நல்லது. இல்லை பகுதி நேரத்தில் பணம் சம்பாதிக்கத்தான் ஆசை என்றால் அதற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டியதில்லை.

ஏற்றுமதி வணிகம் எனது நீண்டநாள் கனவு. ஆனால், பொருளாதார வசதி இல்லை. வங்கிக் கடன் கிடைக்குமா, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், மேலும் எந்தப் பொருளுக்கு எந்த நாட்டில் அதிக வரவேற்பு உள்ளது ஆகியற்றுக்கு ஆலோசனை கிடைக்குமா?

இரா. முத்துகிருஷ்ணன், பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம்.

எதை ஏற்றுமதி செய்வது என்பதை அறிய முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன தேவை என்பதை கண்டறிய வேண்டும். ஏற்றுமதிக்கான பல அமைப்புகள் நம் ஊரிலேயே உள்ளன. எல்லாத் தொழில் அமைப்புகளிலும் ஏற்றுமதிப் பிரிவும் உண்டு. தவிர வலைதள தேடுதலிலேயே உங்களால் பல விஷயங்களைத் தெரிதுகொள்ள முடியும். எந்த அளவில் (scale) இதைச் செய்யப் போகிறீர்கள் என்பதுதான் உங்கள் முதலீட்டைத் தீர்மானிக்கும்.

வங்கி உதவி எல்லாத் தொழில்களைப்போல ஏற்றுமதி தொழிலுக்கும் உண்டு. ஆனால், செய்யும் தொழிலின் நெளிவு சுளிவுகள் தெரியும்வரை பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. உற்பத்தியாளருக்கும் வியாபாரிக்கும் இடைப்பட்ட முகவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. உடனடியாகப் பெரிய லாபத்துக்கு ஆசைப்படாமல், நல்ல தொழில் உறவுகளை வளர்த்து நீண்ட காலத் திட்டத்தில் செயல்பட்டால் வெற்றி உறுதி.

உதாரணத்துக்கு, துபாய் நாட்டுக்கு சகலமும் வெளியிலிருந்துதான் வருகிறது. அத்தனையும் இறக்குமதி செய்யும் அந்நாட்டில் கிடைக்காத பொருளே இல்லை எனலாம். ஆனால், இது முதிர்ந்த நிலை ஏற்றுமதியாளர்களுக்குத்தான் அதிகச் சாதகமாகும். அங்குள்ள என் நண்பர் ஒருவர் சொன்னார், ஆப்பிரிக்காவில் எதை ஏற்றுமதி செய்தாலும் நல்ல லாப விகிதம் கிடைக்கிறது என்று. ஆனால், சரியான சந்தையும் சரியான பொருளும் எவை என்பதை நிர்ணயிக்க வேண்டும். அங்கு உங்களுக்கு உதவ ஆள் இருந்தால் நல்லது.

நம் நாட்டில் ஏற்றுமதி செய்ய ஏராளமான பொருட்களும் சேவைகளும் உள்ளன. இன்னமும் அதற்கான விழிப்புணர்வு குறைவு. அரசாங்கமும் ஏற்றுமதிகளைப் பெரிதும் ஊக்குவிக்கிறது. அமைப்பு ரீதியாகப் பலம் பெற்று, ஏற்றுமதியாளர்கள் சிறந்த தொழில் அறிவுடன் நிர்வாகம் செய்தால் இங்கு நல்ல லாபம் பெறலாம்.

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்