ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. படிக்க சிறப்பு நுழைவுத்தேர்வு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) நிறுவனமும் உயர்கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. எல்லாவற்றுக்கும் மேலாக அவை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகும்.

இந்தியாவில் ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, டெல்லி, அசாம், கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, ஐதராபாத், குஜராத் காந்தி நகர் என நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. ஐஐடி, ஐஐஎஸ்சி உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு “கேம்பஸ் இண்டர்வியூ” மூலம் வேலைவாய்ப்பு உறுதி என்பதால் இங்கு சேர போட்டி கடுமையாக இருக்கும்.

சிறப்பு நுழைவுத்தேர்வு

பெங்களூர் ஐஐஎஸ்சி மற்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஐஐடி-க்களில் எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கும், எம்டெக் மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி, எம்எஸ்சி, எம்டெக் உடன் இணைந்த பிஎச்.டி படிப்புகளுக்கும் மாணவர் களைச் சேர்க்க ஆண்டுதோறும் “ஜாம்” (Joint Admission Test) என்ற சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஏதாவது ஒரு ஐஐடி நிறுவனம் இந்த

“ஜாம்” நுழைவுத்தேர்வை நடத்துகிறது. பி.எஸ்சி. படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் ஜாம் நுழைவுத்தேர்வு எழுதலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் 50 சதவீத மதிப்பெண் போது மானது.

பிப்ரவரி மாதம் 8

2015-2016-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜாம் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வை கவுஹாத்தி (அசாம்) ஐஐடி நடத்துகிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் எம்எஸ்சி, எம்டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 3-ந் தேதி முதல் www.iitg.ernet.in/jam2015 என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

கடைசித்தேதி

இதற்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வில் கேள்விகள் ஆப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவிவரங்களை மேற்கண்ட இணைய தளத்திலேயே மாணவர்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்