ஆங்கிலம் அறிவோமே 201: ரணகளமான வெற்றி!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

ஒட்டுவதற்கு செல்லோ டேப்பைப் பயன்படுத்துகிறோம். இதற்கான எழுத்துகளை Sellotape என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அது தவறுதானே? Cellotape என்பதுதானே சரி?

வாசகரே, உங்கள் ஐயம் நியாயமானது. அதுபோல ஒட்டக்கூடிய டேப்கள் Cellulose tape என்றுதான் அழைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றை Sellotape என்ற பெயரில் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் தயாரித்துப் பிரபலப்படுத்தியது. இது மிகவும் பிரபலமாகவே அதை Sellotape என்றே (இதுபோன்று யார் தயாரித்த பொருளையும்), அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். பொதுவாகச் சொல்வதென்றால் ‘ஒட்டக்கூடிய டேப்’ என்ற பொருளில் அமைந்த adhesive tape என்றுதான் அழைக்க வேண்டும். 

அமெரிக்காவில் இந்த வகையான டேப்களை ஸ்காச் டேப் (Scotch tape) என்று அழைக்கிறார்கள்.

****************

“Go back to the drawing board என்றால் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். 

முதல் திட்டம் தோல்வியில்  முடிவடைந்ததால் அடுத்த திட்டத்தை முதலிலிருந்து தொடங்குவது என்பதுதான் இதற்குப் பொருள். (சூரி பரோட்டா சாப்பிடும் காட்சி நினைவுக்கு வருகிறதா?) Instead of approving the scheme, they have sent it back to the drawing board by ordering a fresh proposal. 

 It is back to the drawing board as the finance scheme is scrapped.

****************

“வாடகைக்கு வீடு உண்டு என்பதை Let out என்ற அறிவிப்பின் மூலம் அறிந்துகொள்கிறோம். Let out என்பதன் சரியான அர்த்தம் என்ன?”

வாசகரே, let என்றால் அனுமதிப்பது. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் வாடகைக்காக வீட்டில் குடியேற அனுமதிப்பதை let out என்கிறார்கள். They have let out their house. 

ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதால் மனதில் உள்ள கோபம் அல்லது பெரும் சோகத்தைக் களைய வாய்ப்பு உண்டு. கோபம் அதிகமுள்ள நபர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்வதும் இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்வதும்கூட let out-தான். இதனால் அந்தக் கோபமும் சோகமும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. 

Football provides good opportunity for people to let out their aggressions.

2jpg100 

“Carnivorous என்றால் என்ன?”

வாசகரே, முதலில் - vorous என்ற அந்தச் சொல்லின் இறுதிப் பகுதிக்கு அர்த்தத்தை அறிந்துகொள்வோம். -vorous என்றால் ஒரு குறிப்பிட்ட வகை உணவையே உட்கொள்வது என்று அர்த்தம். 

Carnivorous என்றால் இறைச்சி உண்ணும் உயிரினம் என்று அர்த்தம். சில தாவரங்கள்கூட carnivorous ஆக இருக்கின்றன.

Herbivorous அல்லது herbivore என்றால் தாவரங்களை மட்டும் உட்கொள்பவை. பசுக்கள், ஆடுகள் போன்றவை herbivores. 

Insectivorous என்றால் பூச்சிகளைச் சாப்பிடும் இயல்புகொண்டவை. 

Gramnivorous என்றால் புற்களை மட்டுமே சாப்பிடக்கூடியவை.

Frugivorous என்றால் பழங்களை மட்டுமே சாப்பிடக்கூடியவை.

Piscivorous என்றால் மீன்களைச் சாப்பிடும் இயல்புகொண்டவை. 

Granivorous என்றால் தானியங்களை முக்கிய உணவாகச் சாப்பிடுபவை. 

Apivorous என்றால் தேனீக்களை உணவாகக் கொள்ளும் தன்மைகொண்டவை.

சரி இன்னதென்று இல்லாமல் தாவரம், விலங்கு என்று கலந்து கட்டியாக உண்ணும்தன்மை கொண்டவற்றை எப்படிக் குறிப்பிடலாம்? Omnivorous.

****************

Intense என்பதற்கும், intensive என்பதற்கும் என்ன வேறுபாடு?

கிட்டத்தட்ட ஒன்றுதான். 

Intense என்ற சொல் உணர்வுகளைக் குறிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

Intensive என்றால் மிகவும் ஆழமாக, உக்கிரமாக, குறைந்த நேரத்திலேயே செறிவாக ஒன்றைச் செய்வது. 

He suddenly felt an intense pain his head. 

This is an intensive course in  English. 

The soil is not long fertile due to intensive farming.

****************

தொடக்கம் இப்படித்தான்

Pyrrhic Victory என்பது எந்த வகை வெற்றி?

வெற்றி அல்லாத வெற்றி!  இதை ‘பிரி விக்டரி’ என்று உச்சரிக்க  வேண்டும். 

சண்டையில் வெற்றி பெறுகிறீர்கள். ஆனால், அதற்காக நீங்கள் கொடுத்த விலை மிகவும் அதிகம். சொல்லப்போனால் நீங்கள் வெற்றி பெற்றாலும் அந்தச் சண்டை உங்களுக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் அதிகப்படியானது. இப்படிப்பட்ட வெற்றியை ‘Pyrrhic Victory’ என்பார்கள். 

கி.மு. 319-லிருந்து 272வரை ஆட்சிசெய்த கிரேக்க மன்னர் பிரஸ் (Pyrrhus). இவர் கி.மு. 281-ல் ரோமானியர்கள்மீது படையெடுத்தார். தனது யானைப் படையின் அசாத்திய வலிமை காரணமாக வெற்றிபெற்றார். ஆனால், ரோமானியப் படைகள் இவரது  படையிலுள்ள பெரும்பாலானோரை கொன்று குவித்தது. வெற்றிக்குப் பிறகு அவரைப் பாராட்டியபோது “இதுபோன்ற இன்னொரு வெற்றி எனக்கு உண்டானால் அது என் இறப்புக்குச் சமம்” என்றாராம்.

சிப்ஸ்

# Puddle என்றால்?

குட்டை. அதாவது கொஞ்சமாகத் தேங்கியுள்ள தண்ணீர். 

# Meter, metre என்றால் என்ன?

Meter என்பது அளவை அல்லது கருவி. Metre என்பது பாடல்களிலுள்ள ரிதம் - அதாவது எதுகை-மோனை. 

# Yeoman service  என்றால் என்ன?

மிகப் பெரிய சேவை.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்