உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் ஜெர்மனி வெற்றி

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனை படைத்துள்ளது.

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணித் தரப்பில் நடுகள வீரரான லியோன் கோரேட்ஸ்கா இரு கோல்களும், சான்ட்ரோ வெங்கர், அன்டோனியா ருடிஜர், எம்ரே கேன் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

தகுதி சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் ஜெர்மனி அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்குள் நுழைவது இதுவே முதன் முறை. ஐரோப்பிய நாடுகளில் தோல்வியை சந்திக்காமல் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் 2-வது அணி ஜெர்மனி ஆகும்.

இதற்கு முன்னர் ஸ்பெயின் இதேபோன்று 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறியதுடன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. தகுதி சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி அணி இம்முறை 43 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது. - ஏஎப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

13 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

27 mins ago

ஆன்மிகம்

37 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்