சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள்: கிறிஸ் கெய்லின் தனித்துவ சாதனை

By ராமு

டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை புரிந்துள்ள மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்த முதல் வீரரானார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் சனிக்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் 21 ரன்களில் வீழ்த்தியது மே.இ.தீவுகள். அதில் கெய்ல் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார், இதில் 3 நான்குகள், 4 ஆறுகள் அடங்கும்.

அப்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்துச் சாதனை புரிந்த முதல் வீரர் ஆனார் கிறிஸ் கெய்ல்.

இந்தச் சாதனையை தனது 52-வது போட்டியில் நிறைவேற்றினார் கெய்ல்

இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே வீசிய பந்தை மிகப்பெரிய சிக்சருக்குத் தூக்கி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

அதிக டி20 சிக்சர்களில் தற்போது கிறிஸ் கெய்ல் 103 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க பிரெண்டன் மெக்கல்லம் 91 சிக்சர்களுடன் 2-ம் இடத்திலும் ஷேன் வாட்சன் 83 சிக்சர்களுடன் 3-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 74 சிக்சர்களுடன் 4-ம் இடத்திலும் ஷாகித் அப்ரீடி 73 சிக்சர்களுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர்

கிறிஸ் கெய்ல் 52 சர்வதேச டி20 போட்டிகளில் மே.இ.தீவுகளுக்காக 103 சிக்சர்களையும் 134 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார் ஒருநாள் போட்டிகளில் கெய்ல் 238 சிக்சர்கள் அடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

க்ரைம்

11 mins ago

இந்தியா

20 mins ago

விளையாட்டு

21 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்