அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்: ஆடவர் பிரிவில் கெவின் ஆண்டர்சனும் தகுதி

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 13-ம் நிலை வீராங்கனையும் 2 முறை விம்பிள்டனில் பட்டம் வென்றவருமான செக் குடியரசின் பெட்ரா விட்டோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் வீனஸ் 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்றது.

7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் அதிக வயதில் அரை இறுதிக்குள் நுழைந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 3-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்துக்கு குறிவைத்துள்ள வீனஸ், அரை இறுதியில் சகநாட்டைச் சேர்ந்த ஸ்லோன் ஸ்டீபென்ஸை எதிர்கொள்கிறார்.

83-ம் நிலை வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபென்ஸ், கால் இறுதியில் 16-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபென்ஸ் 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். அமெரிக்க ஓபன் அரை இறுதியில் ஸ்லோன் ஸ்டீபென்ஸ் அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் அவர் அதிகபட்சமாக 4-வது சுற்றை கடந்தது இல்லை.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 28-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், 17-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரேவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் 7-6 (7-5), 6-7 (9-11), 6-3, 7-6 (9-7) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் 2003-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார் கெவின் ஆண்டர்சன். கடைசியாக அந்த நாட்டைச் சேர்ந்த வெயின் பெரேரிரா 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்