உலகக் கோப்பை தொடருக்கு இலங்கை நேரடியாக தகுதி பெறுமா?

By பிடிஐ

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் 4 ஆட்டங்களில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளதால் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை, தற்போதைய சூழ்நிலையில் இழந்துள்ளது. வரும் 30-ம் தேதி நிலவரப்படி உலகக் கோப்பை தொடருக்கு, ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனிமேல், மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாட உள்ள ஒருநாள் போட்டித் தொடர்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வரும் 13-ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒரேயொரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும் அதைத் தொடர்ந்து 19 மற்றும் 29-ம் தேதிகளுக்கு இடையில் இங்கிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டித் தொடரிலும் விளையாட உள்ளது.

இதில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை குறைந்தது 4-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியால் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடி உள்ளது. இந்த கணக்கு இலங்கை அணி இந்தியாவிடம் ஒருநாள் போட்டித் தொடரில் ஒயிட்வாஷ் பெற்றால் மட்டுமே பொருந்தும். இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், மேற்கிந்தியத் தீவுகள் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் உலகக் கோப்பையில் நேரடியாக கால் பதிக்க முடியும். ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் இலங்கை, உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிடும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்