இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் திடீர் நீக்கம்

By செய்திப்பிரிவு

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 63 வயதான ஒல்ட்மான்ஸ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளராக ஒல்ட்மான்ஸ், உடற்பயிற்சி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது பாராட்டுக்குரியது, ஆனால் போட்டி முடிவுகள் மற்றும் அணியின் திறன் நிலையானதாகவும், விரும்பத்தக்க வகையிலும் இல்லாததால் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை அந்த பணியை தற்போதைய உயர் செயல் திறன் இயக்குநர் டேவிட் ஜான் கவனித்துக் கொள்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடைபெற்ற ஹாக்கி உலக லீக் தொடரில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

4 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்