ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்கு விளையாடுவதற்கே முன்னுரிமை - பென் ஸ்டோக்ஸ்

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் தான் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுப்பேன் என உலகின் முதன்மை ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்த சீசனில் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடஉள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்திருந்தது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த 3 நாட்களில் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது, ஜூன் 16-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

இதனால் அயர்லாந்து டெஸ்ட்போட்டிக்கு தயாராகும் விதமாக பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் இருந்து முன்னதாகவே புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக சிஎஸ்கேவின் இறுதிக்கட்ட ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

பென் ஸ்டோக்ஸ் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காகவே விளையாடுவேன். அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்வேன். அதற்கு போதுமான நேரம் கொடுப்பதையும் உறுதி செய்துகொள்வேன். மற்ற வீரர்களின் நிலை குறித்து இப்போதே கூற முடியாது. ஆனால் அவர்களிடம் பேசுவேன். ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு அவர்கள், தயாராக இருக்க விரும்புகிறார்களா என்பதை கேட்டறிவேன்” என்றார்.

ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ஹாரி புரூக் உள்ளிட்டோரும் பல்வேறு அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 3-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்