தொடர்ந்து 6 சதங்கள் சாதனையை 16 ரன்களில் தவற விட்ட சங்கக்காரா

By இரா.முத்துக்குமார்

தொடர்ந்து 6 சதங்கள் என்ற டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்யக் கிடைத்த வாய்ப்பை 16 ரன்களில் இழந்தார் இலங்கை நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரா.

டான் பிராட்மேன், சி.பி.ஃபிரை, மைக் புராக்டர் ஆகியோர் முதல் தர கிரிக்கெட்டில் 6 சதங்களைத் தொடர்ச்சியாக அடித்தது குறிப்பிடத்தக்கது, இந்த உயர்மட்ட பட்டியலில் இணையும் வாய்ப்பைச் சங்கக்காரா 16 ரன்களில் தவறவிட்டார்.

முதல் தர கிரிக்கெட்டில் 5 தொடர் சதங்களை அடித்த சாதனைப்பட்டியலில் இணைந்த சங்கக்காரா சர்ரே அணிக்காக ஆடிய கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 84 ரன்களில் ஆட்டமிழந்து தொடர் 6-வது சத சாதனையை தவறவிட்டார்.

சர்ரே அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 200 ரன்களை அடித்த சங்கக்காரா, இரண்டாவது இன்னிங்சில் 107 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து வெஸ்ட்லி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அருமையாக ஆடி வந்த சங்கக்காரா 9-வது விக்கெட்டாகவே ஆட்டமிழந்தார்.

லாரா, எவர்டென் வீக்ஸ், மைக் ஹஸ்ஸி, பார்த்திவ் படேல் ஆகியோர் பட்டியலில் இணைந்த சங்கக்காரா தொடர் 5 சதங்களில் ஒன்றை இரட்டைச் சதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்