சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா-டென்மார்க் இன்று மோதல்

By பிடிஐ

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் தொடர் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க்குடன் மோதுகிறது.

டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பி.வி.சிந்து தலை மையில் களமிறங்குகிறது. இதே பிரிவில் 3-வது அணியாக இந்தோ னேஷியா உள்ளது. தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, இதுவரை இந்த தொடரில் பதக்கம் வென்றது கிடையாது.

அதிகபட்சமாக கடந்த 2011-ம் ஆண்டு நாக் அவுட் சுற்றுக்கு முன் னேறியிருந்தது. மேலும் கடந்த இரு தொடர்களிலும் இந்திய அணி லீக் சுற்றை தாண்டவில்லை. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இருமுறை 2-வது இடத்தை பிடித்த டென்மார்க்குடன் இன்று மோதுகிறது.

நாளை மறுதினம் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் 6 முறை இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ள இந்தோனேஷியாவை எதிர்கொள் கிறது. ஒரு அணிக்கு எதிரான போட்டி மொத்தம் 5 ஆட்டங்களை உள்ளடக்கியது. ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு ஆட்டம் நடத்தப்படும்.

இதில் 3 ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த தொடரில் சாய்னா நெவால் கலந்து கொள்ளவில்லை. எனினும் அவர் இல்லாதது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றே கருதப்படுகிறது. உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து இந்த தொடரில் பொறுப்பை சரியாக கையாள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்து கூறும்போது, “இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்ப தாகவே நான் கருதுகிறேன். கலப்பு அணி தொடர் என்பதால் அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். சாய்னா இந்த தொடரில் விளையாடவில்லை. அது ஒரு பிரச்சினை இல்லை. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

டென்மார்க் அணியின் ஆடவர் பிரிவில் இடம் பெற்றுள்ள 3-ம் நிலை வீரரான விக்டர் ஆக்செல் சன், 4-ம் நிலை வீரரான ஜான் ஓ ஜர்கென்சன் ஆகியோர் இந்தியா வின் அஜெய் ஜெயராம், காந் துக்கு கடும் சவாலாக இருப்பார் கள் என கருதப்படுகிறது.

விக்டர் ஆக்செல்சனுக்கு எதிராக ஜெயராம் 5 ஆட்டங்களில் மோதி 3-ல் வெற்றி கண்டுள்ளார். அதேவேளையில் ஜான் ஓ ஜர் கென்சனுக்கு எதிராக 4 ஆட்டத் தில் விளையாடி காந்த் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி, பிரணவ் ஜெர்ரி சோப்ரா ஜோடியும் களமிறங்குகிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்