மகளிர் ஐபிஎல் மூலமாக ரூ.4,670 கோடி: பிசிசிஐ

By செய்திப்பிரிவு

மும்பை: மகளிர் ஐபிஎல் (டபிள்யூஐபிஎல்) மூலமாக ரூ,4,699.99 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

டபிள்யூ ஐபிஎல் போட்டியில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே நேற்று மகளிர் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டது. இதில் அகமதாபாத் அணியை ரூ. 1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது.

மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியைரூ.901 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனமும், டெல்லிஅணியை ரூ.810 கோடிக்கு ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனமும் வாங்கியுள்ளன.

கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் குழும் ரூ.757 கோடிக்கு லக்னோ அணியை வாங்கியுள்ளது.

2008-ல் ஆடவர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விடவும் தற்போது அதிகத்தொகை டபிள்யூஐபிஎல் போட்டிக்குக்கிடைத்துள்ளது என்றும் அணிகளின்ஏலம் மூலமாக ரூ.4669.99 கோடி கிடைத்துள்ளது என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தொழில்நுட்பம்

58 mins ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்