பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதே என் லட்சியம்: பி.வி.சிந்து உறுதி

By பிடிஐ

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதே என் லட்சியம் என்று பி.வி.சிந்து கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மும்பையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு எனக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. ஒலிம்பிக் போட்டியில் இந்த ஆண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்ற தையும், சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதையும் பெருமையாக கருதுகிறேன். சர்வதேச தரவரி சைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள எனக்கு முதலிடத்தை பிடிப் பதே லட்சியம். அதற்காக அடுத்த ஆண்டு கடுமையாக உழைப்பேன்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பும் பின்பும் நான் ஒரே விதமான உழைப்பைத்தான் பாட்மிண்டன் விளையாட்டுக்காக கொடுத்துள்ளேன். ஆரம்பம் முதல் இப்போது வரை கடுமையாகவே பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இருப்பினும் சிந்தனை அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நான் மாறியிருக்கிறேன். முன்பை விட இப்போது அதிக தன்னம் பிக்கையுடன் போட்டிகளை எதிர்கொள்கிறேன். ரசிகர்களும் முன்பைவிட அதிகமாக என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அவர் களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இன்னும் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது.

என் பாட்மிண்டன் வாழ்க்கை யில் இது ஆரம்ப கட்டம்தான். நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது. விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்படுவேன்.

தரவரிசைப் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்தால் மட்டும் போதாது. அதை தக்கவைக்க வேண்டும். நாள்தோறும் புதுப்புது இளம் வீராங்கனைகள் பாட்மிண்டன் விளையாட்டில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அது மிகவும் கடினம். திறமைவாய்ந்த இளம் வீராங்கனைகளை எதிர் கொண்டு ஆட மேலும் கடினமாக பயிற்சி பெற வேண்டியுள்ளது.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்