பயிற்சியாளர்களுக்கு அடிக்கடி ஓய்வு ஏன்? - திராவிட் குறித்து ரவி சாஸ்திரி கேள்வி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடுக்கு நியூஸிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார், அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூஸிலாந்து நாட்டுக்கு கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து தொடரிலும் ராகுல் திராவிடுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அப்போதும் லஷ்மண்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இயங்கி இருந்தார்.

“ஓய்வு எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அணியையும், வீரர்களையும் அறிந்துகொள்ள விரும்புபவன். அதன்மூலம் ஒரு கட்டுப்பாட்டை அணியில் கடைபிடிக்க முடியும். பயிற்சியாளர்களுக்கு ஏன் அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது. உண்மையில் அதற்கான தேவைதான் என்ன?

ஐபிஎல் தொடரின்போது 2 முதல் 3 மாத காலம் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. அந்தக் காலம் ஓய்வுக்கு போதும் என நினைக்கிறேன். மற்ற நேரங்களில் அவர் வீரர்களுடன் இருந்து அவர்களை கவனிக்க வேண்டும். அந்தப் பொறுப்பில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்ய வேண்டும்” என ரவி சாஸ்திரி சொல்லியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை வாக்கில் வீரர்கள் அடிக்கடி ஓய்வு எடுப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்