கால்பந்து திருவிழா: நடப்பு சாம்பியன் அங்கம் வகிக்கும் குரூப் ‘டி’

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை நெருங்கும் போது, சில அணிகள் கோப்பையை வெல்வதற்கான யதார்த்தமான வாய்ப்பைக் கொண்டிருப்பது தெளிவாக தெரியும். அவற்றில் ஒன்றுதான் பிரான்ஸ் அணி.

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போராடும் குணத்துக்கும், உறுதிக்கும் பெயர் பெற்ற டென்மார்க், ஆஸ்திரேலிய அணிகளும், ஆப்பிரிக்க அணியான துனிசியாவும் இடம் பெற்றுள்ளன. சுவாரஸ்யமாக 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையிலும் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தன. இரு முறை சாம்பியனான பிரான்ஸ் லீக் சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடிக்கக்கூடும்.

பிரான்ஸ் - பயிற்சியாளர்: டிடியர் டெஸ்ஷாம்ப்ஸ், தரவரிசை 4: 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் தோல்வியடைந்தது. எனினும் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக்கை வென்றனர். ஆனால் இந்த ஆண்டு நேஷன்ஸ் லீக்கில் வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க பிரான்ஸ் அணி போராடியது.

பலம்: உலகின் சிறந்த லீக்குகளில் விளையாடும் இரண்டு சிறந்த ஸ்ட்ரைக்கர்களை பிரான்ஸ் கொண்டுள்ளது. ரியல் மாட்ரிட்டின் கரீம் பென்சிமா மற்றும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் கிளியான் பாப்பே ஆகியோர் அடங்கிய பிரான்ஸ் அணியின் தாக்குதல் ஆட்டம் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

பலவீனம்: பிரான்ஸ் அணியில் சில முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததைத் தொடர்ந்து அணியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நிகழ்கால உலக கால்பந்து அரங்கில் மிகச்சிறந்த தற்காப்பு மிட்ஃபீல்டர் என அறியப்படும் கோலோ கன்டே, தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் கத்தார் உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இதேபோன்று பிரான்ஸ் அணி 2018-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த பால் போக்பா, முழங்காலில் காயம் அடைந்துள்ளார். கால்பந்து திருவிழா தொடங்குவதற்குள் அவர், உடற்தகுதி பெறுவது சந்தேகமாக உள்ளது.

டென்மார்க் - தரவரிசை 10; பயிற்சியாளர் காஸ்பர் ஹுல்மண்ட்:

நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மாரடைப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர், உலகக் கோப்பை தொடரில் வரும் 22-ம் தேதி துனிசியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் களமிறங்க ஆயத்தமாகி உள்ளார். டென்மார்க் அணி சிறந்த பார்மில் உள்ளது. சமீப காலங்களில் அவர்கள், யூரோ தொடரில் முதல் ஆட்டத்திலேயே எரிக்சனை இழந்த போதிலும் அரை இறுதி சுற்று வரை முன்னேறினர்.

பலம்: வலுவான தற்காப்பு ஆட்டம். சைமன் கேஜெர், ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் ஆகியோரை கொண்ட பின்வரிசையை எளிதில் மீற முடியாது. எதிரணியினர் அந்தச் சவாலை முறியடித்தாலும் அவர்கள், கோல் கம்பத்தின் முன் ஒரு திடமான சுவரை காஸ்பர் ஸ்மிச்செல் வடிவில் எதிர்கொள்வார்கள்.

பலவீனம்: டென்மார்க் அணியில் கோல் வேட்டையாடக்கூடிய தனிப்பட்ட வீரர்கள் இல்லை. தகுதிச் சுற்றில், ஜோகிம்பெடர்சன் 5 கோல் அடித்து அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

துனிசியா - பயிற்சியாளர் ஜலேல் கத்ரி, தரவரிசை 30: துனிசியா நாக் அவுட் சுற்றுக்குள் நுழையத் தவறினால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பயிற்சியாளர் ஜலேல் கத்ரி தெரிவித்துள்ளார். துனிசியா இதுவரை 5 முறை உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளது. ஆனால் ஒருமுறை கூட அந்த அணி லீக் சுற்றை கடந்தது இல்லை. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் பனாமாவுக்கு எதிராக மட்டும் துனிசியா வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் ஒரு முறை துனிசியா அணி தங்கள் நட்சத்திர விங்கரான யூசுப் மசாக்னியின் அனுபவத்தை பெரிதும் நம்பி உள்ளது.

பலம்: துனிசியா அணி இறுக்கமாக பிணைக்கப்பட்ட தற்காப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது. கடந்த 50 போட்டிகளில் அவர்கள் அதிக கோல்களை வாங்கவில்லை.

பலவீனம்: வேகமான முன்கள வீரர்கள் துனிசியாவின் பாதுகாப்பு அரணை உடைக்க முடியும். சமீபத்தில் பிரேசில் அணி துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியிருந்தது.

ஆஸ்திரேலியா - பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட்; தரவரிசை 38: தற்போதைய ஆஸ்திரேலிய அணியிடம் பொற்கால தலைமுறையில் இருந்தது போன்ற தரம் இல்லை என்றாலும், போராடும் குணத்தை விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும், ஒருங்கிணைந்து விளையாடும் திறனும் எதிரணிக்கு ஆபத்தானதாக திகழக்கூடும். அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் அஜ்டின் ஹ்ருஸ்டிக், யூரோப்பா லீக்கில் வெற்றி பெற்ற ஃபிராங்க்ஃபர்ட் ஆகியோர் முக்கியமான வீரர்களான உள்ளனர்.

பலம்: ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலம் அவர்களின் போராட்ட குணம். தவிர, அவர்கள் போட்டியில் சிறந்த அணிகளில் ஒன்றைக் கொண்டுள்ளனர்.

பலவீனம்: புகழ்பெற்ற டிம் காஹிலுக்கு மாற்று வீரரை ஆஸ்திரேலியா கண்டறியவில்லை. முக்கிய ஸ்ட்ரைக்கர்களான மேத்யூ லெக்கி, ஜேமி மெக்லாரனுக்கு பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்