ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி கிரேம் ஸ்மித்திற்கு என்ன தெரியும்? - ஸ்டீவ் ஸ்மித் பதிலடி

By இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை இழந்த அணியாக உள்ளது என்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ‘பண்பாடு’ சரிவடைந்துள்ளது என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் விமர்சனத்திற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பதிலடி கொடுத்துள்ளார்.

“ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி கிரேம் ஸ்மித்திற்கு என்ன தெரியும் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் இதில் ஈடுபட்டதில்லை. அணி தற்போது நல்ல இடத்தில்தான் உள்ளது. எங்கள் கிரிக்கெட் பண்பாடு சரியாகத்தான் உள்ளது. சீராக முன்னேற்றம் உள்ளது இன்னும் நன்றாகி வருகிறது. நாங்கள் பிணைப்பு கொண்ட ஒரு அணியாக திகழ்கிறோம், வெற்றிப்பாதைக்கு இந்த வாரத்தில் திரும்புவோம்.

நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறேன், அணி தோற்கும் போது இத்தகைய விமர்சனங்கள் எழுவது இயல்பானதே. ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடுமோ அந்தப் பாணிக்கு மீண்டும் வந்து முடிவுகளை மாற்ற முயற்சி செய்வோம்” என்றார்.

மேலும் பெர்த் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முதல் 2 மணி நேரத்தில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்களை எடுத்தது, காரணம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்காக நேதன் லயனை பயன்படுத்தாமல் இருந்தார், இந்த உத்தியை ஷேன் வார்ன் விமர்சனம் செய்தார்.

இது குறித்து ஸ்மித் கூறும்போது, “வார்னிற்கு விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது, ஆனால் நான் செய்தது சரி என்றே கருதுகிறேன். அணி நல்ல நிலையில் உள்ளது, இந்தச் சவாலை எதிர்கொண்டு முடிவுகளை மாற்றுவதில் வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.அநேகமாக அடுத்த டெஸ்ட் போட்டி வித்தியாசமாக இருக்கும்” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்