மொகமது ஷமி பந்து வீச்சை கடினமாக உணர்ந்தேன்: மொயின் அலி

By இரா.முத்துக்குமார்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி இன்று ராஜ்கோட்டில் சதம் அடித்து ஷமி பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் அவர் ஆட்டம் முடிந்து கூறும்போது, “எங்களுக்கு நல்ல ஸ்பின் கிடைக்கிறது என்று கருதுகிறேன். ரிவர்ஸ் ஸ்விங்கும் ஓரளவுக்கு எடுக்கிறது. பந்துகளை மெதுவாக வீசும் போது கொஞ்சம் கூடுதலாகத் திரும்பியதாக உணர்கிறேன்.

இத்தகைய பிட்ச்களில் பொறுமை மிகவும் அவசியம் என்பதை சக்லைன் முஷ்டாக் எங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

இன்று பேட்டிங் இறங்கும் போது நான் கொஞ்சம் மந்தமாக உணர்ந்தேன். நேற்று கூட நான் கால்களை சரியாக நகர்த்தி ஆடியதாக நினைக்கவில்லை. ஆனால் சூழ்நிலையை தக்கவைக்க ஆடினேன்.

மொகமது ஷமி அருமையாக வீசினார். நான் அவர் பந்து வீச்சை பொறுமையாக ஆடி கடந்திருக்க வேண்டும், ஆனால் மன நிலை எதிர்மறையாக இருந்தது, காரணம் அவர் பந்துகளை எதிர்கொள்வது எனக்கு கடினமாக இருந்தது. நாளை முக்கியமான நாள் ஆட்டமாகும்.

இந்திய அணியை கட்டுப்படுத்துவோம் என்று நம்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

38 mins ago

ஓடிடி களம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்