ஆஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றம்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 85 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 100.5 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டி காக் 104, டெம்பா பவுமா 74, பிலாண்டர் 32 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹஸல்வுட் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ஆட்ட நேரத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. ஜோ பர்ன்ஸ் 0, டேவிட் வார்னர் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர். கவாஜா 56, ஸ்மித் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 120 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

மேலும்