El Clásico | லா லீகாவில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: நடப்பு லா லீகா தொடரில் பார்சிலோனா அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது ரியல் மாட்ரிட் அணி. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி எல் கிளாசிகோ என அழைக்கப்படுகிறது. இந்த போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் பகுதியில் உள்ள சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்பெயின் நாட்டில் கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் தான் லா லீகா. கடந்த 1929 முதல் நடத்தப்பட்டு வரும் தொடர் இது. நடப்பு 2022-23 சீசனுக்கான தொடர் 92-வது சீசன் ஆகும். மொத்தம் 85 போட்டிகள். இதுவரையில் நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்தன. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளை ‘எல் கிளாசிகோ’ என அறியப்படுகிறது. கால்பந்தாட்ட உலகில் கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளில் இது மிகவும் பிரபலமான போட்டியாகும்.

இதில் இரண்டு அணிகளும் விளையாடின. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அதோடு உலகம் முழுவதும் சில நாடுகளில் இந்த போட்டி சிறப்பு காட்சியாக நேரலையில் ஒளிபரப்பட்டது. இந்தியாவில் மும்பை நகரில் இந்த போட்டியின் சிறப்பு காட்சி ஒளிபரப்பானது.

இதில் மாட்ரிட் அணி மொத்தம் 3 கோல்களை பதிவு செய்தது. கரீம் பென்சிமா, வால்வெர்டே மற்றும் ரோட்ரிகோ ஆகியோர் தலா ஒரு கோல் பதிவு செய்திருந்தனர். பார்சிலோனா அணி சார்பில் டோரஸ், ஒரு கோல் பதிவு செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்