டி20 உலக கோப்பை | சீட்டுக்கட்டாக சரிந்த ஐக்கிய அரபு அமீரக அணி: நெதர்லாந்துக்கு 112 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

மெல்போர்ன்: டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டியின் இரண்டாம் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை சேர்த்தது.

8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.

7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது. அதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்