3-வது டெஸ்ட்: இந்தியா முன்னிலை; ஜடேஜா அரை சதம்

By கார்த்திக் கிருஷ்ணா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா 354 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் ஸ்கோரை விட 71 ரன்கள் முன்னிலையாகும்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 271 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அஸ்வினும் - ஜடேஜாவும் இன்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 40 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்று ரன் சேர்த்த இந்த இணை ஆட்டத்தின் 95-வது ஓவரில் பிரிந்தது. ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அஸ்வின் 72 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை அஸ்வினும் - ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப்பில் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய ஜயந்த் யாதவ், ஜடேஜாவுடன் இணைந்து ரன் சேர்க்க ஆரம்பித்தார். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா 104 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதம் எட்டினார். மேற்கொண்டு இந்த இணையை பிரிக்க இங்கிலாந்து செய்த முயற்சிகள் வீணாகின. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 354 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடர்ந்து திறம்பட ஆடிய யாதவ் 66 பந்துகள் நிலைத்து ஆடி 26 ரன்களையும், ஜடேஜா 142 பந்துகளில் 70 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

31 mins ago

கல்வி

34 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்