ஆசிய கோப்பை | இந்தியா முதலில் ஃபீல்ட் செய்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும் - புஜாரா

By செய்திப்பிரிவு

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா முதலில் பந்துவீசி இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும் என தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அதன் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை கிட்டத்தட்ட இந்திய அணி இழந்துள்ளது.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா அடுத்தடுத்து டாஸை இழந்து முதல் பேட் செய்தது. அதுவே இந்தியா டாஸ் வென்றிருந்தால் முடிவு மாறி இருக்கும் என்பது கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்து. அதையே தான் புஜாராவும் தெரிவித்துள்ளார்.

“இந்திய அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை அனுபவம் நல்லதொரு படிப்பினையாக அமைந்துள்ளது. இருந்தாலும் இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆசிய கோப்பையில் ஆட்டத்தின் முடிவுகளில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என கருதுகிறேன். இந்தியா மட்டும் முதலில் பவுலிங் செய்திருந்தால் முடிவு மாறி இருந்திருக்க கூடும்” என புஜாரா தெரிவித்துள்ளார்.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ள 28 டி20 போட்டிகளில் 25 போட்டிகளை இரண்டாவதாக பேட் செய்த அணி தான் வென்றுள்ளது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே 5 போட்டிகளிலும் இரண்டாவதாக பேட் செய்த அணி வெற்றி பெற்று இதே நிலை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்