இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

By பிடிஐ

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தோள்பட்டை காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையாததால் 34 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் முதல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அவர் மீதமுள்ள போட்டிகளுக்காக பிற்பகுதியில் அணியுடன் இணைந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியில் ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் பின், ஜேக் பால் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்களும், மொயின் அலி, அடில் ரஷித், கரேத் பட்டி, ஜாபர் அன்சாரி ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.

ராஜ்கோட் போட்டியை தொடர்ந்து விசாகப்பட்டிணம், மொகாலி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் நடைபெறு கின்றன. சென்னை சேப்பாக்கத்தில் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி விவரம்:

அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் டிக்கெட், ஹஷீப் ஹமீது, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் பின், ஜேக் பால், மொயின் அலி, அடில் ரஷித், கரேத் பட்டி, ஜாபர் அன்சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்