அஸ்வின் முதலிடத்தில் நீடிப்பு

By பிடிஐ

டெஸ்ட் போட்டி அணிகளின் தர வரிசை மற்றும் வீரர்களின் தர வரிசை பட்டிலை ஐசிசி வெளி யிட்டுள்ளது. இதில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ் தான் 111, ஆஸ்திரேலியா 108 புள்ளி களுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளன. இங் கிலாந்து 4-வது இடத்தில் உள்ளது.

பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 900 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஸ்டெயின் 878, ஆண்டர்சன் 861 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 805 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 451 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடம் வகிக்கிறார்.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர்களில் அஜிங்க்ய ரஹானே 825 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளார். புஜாரா 15 மற்றும் விராட் கோலி 17-வது இடங்களில் உள்ளனர். பாகிஸ் தானின் யூனுஸ் கான் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலி யாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்