செஸ் ஒலிம்பியாட் | ‘துரதிர்ஷ்டவசமான தருணம்’ - இந்திய வீரர் டி.குகேஷ்

By செய்திப்பிரிவு

செஸ் ஒலிம்பியாட்டில் அணிகள் பிரிவு பதக்கங்கள் தவிர தனிநபர் பிரிவில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர்.

ஓபன் பிரிவில் இந்திய பி அணியின் டி.குகேஷ் முதல் போர்டில் 11 சுற்றுகள் விளையாடி 9 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதேபோன்று 2-வது போர்டில் விளையாடி நிஹால் சரின் 10 சுற்றுகளில்7.5 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் பெற்றார்.

ஓபன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணியின் வீரர் டி.குகேஷ் கூறும்போது, “ஒட்டு மொத்தத்தில் செஸ் ஒலிம்பியாட் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது. 10-வது சுற்றில் அப்துசட்டோ ரோவை முற்றிலுமாக விஞ்சினேன், பின்னர் ஒரு தருணத்தில் முட்டாள் தனமாக செயல்பட்டுவிட்டேன். அதுவே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அது ஒரு துரதிர்ஷ்டவசமான தருணம். நான் வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது டிரா செய்திருந்தாலோ தங்கப் பதக்கத்திற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். இது போன்ற விளையாட்டில் பல விஷயங்கள் நடக்கின்றன. இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம் வெல்வது என்பது எளிதானது கிடையாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

30 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்