பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் ஆன்டி முர்ரே, முகுருஸா 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் பிரிவு 3-வது சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-1, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் 27-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் இவோ ஹர்லோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிக் 7-6, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவேக்கியாவின் மார்ட்டினை தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தார்.
மகளிர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் யானினா விக்மேயரையும், 6-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலப் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஓஸாகாவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக்குடிரசின் பெட்ரா விட்டோவா, 108-வது இடத்தில் உள்ள ஷெல்பி ரோஜர்ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த ஆட்டத்தில் ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர் 6-0, 6-7, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னே றினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போப்பண்ணா, ருமேனியாவின் புளோரியன் மெர்ஜியா ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் கிரகோரி, குயின்டின் ஹலிஸ் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரியாவின் ஜூலியன் நோவல், ஜெர்மனியின் புளோரியன் மேயர் ஜோடியை வென்றது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago