சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி: சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு தோனி பாராட்டு

By செய்திப்பிரிவு

புனே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.

புனேவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 46-லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது.

வெற்றிக்குப் பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசும்போது, “கடந்த ஐபிஎல் சீசனிலேயே ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியும். முதல் இரண்டு ஆட்டங்களுக்கு, நான் அவருடைய தலைமைப்பொறுப்பை மேற்பார்வையிட்டேன். பின்னர் அவரை அனுமதித்தேன். அவர் தனது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். எல்லாவற்றையும் ஸ்பூனில் எடுத்துஊட்ட முடியாது. நீங்கள் கேப்டனாக ஆனவுடன், நிறைய விஷயங்கள் உங்களை அழுத்தும். இது அந்த வீரரின் செயல்திறனைப் பாதிக்கலாம் என்று கருதுகிறேன்.

கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களில் துணிந்துமுடிவெடுக்க வேண்டும் என ஜடேஜாவிடம் கூறியிருந்தேன். ஆனால், தொடர் செல்லச் செல்ல, கேப்டன்ஷிப்பின் அழுத்தம் அவரதுபேட்டிங் மற்றும் பந்துவீச்சை பாதிக்கச் செய்தது. அவரது மனதும் சோர்வடைந்தது. இதனால் தான் ஜடேஜா விலகினார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். இதன் மூலம் எதிரணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தோம். ருதுராஜ், கான்வே ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலேயே 25 ரன்கள் விட்டுக் கொடுத்தோம்.

ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தை வைத்து எதையாவது செய்யுங்கள். அதனால் வெற்றி கிடைக்கும் என்று எப்போதும் நான் சொல்வேன். எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் 7-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் வரை கட்டுக்கோப்பாக பந்துவீசினர்” என்றார்.

ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்போது, “எதிரணி 200 ரன்களுக்கு மேல் குவிக்கும்போது அதை எட்டுவது சவாலான விஷயம்தான். இருந்தபோதும் கடைசி வரை போராடினோம். முக்கிய நேரத்தில் விக்கெட்களை இழந்ததால் தோல்வி கண்டோம். எனினும் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறோம். அடுத்த ஆட்டத்தில் மீண்டு வருவோம்’’ என்றார்.

இன்றைய ஆட்டம்குஜராத்-பஞ்சாப்

நேரம்: இரவு 7.30 நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்