10 விக்கெட் வீழ்த்தியும் திருப்தியில்லையா? - நியூஸிலாந்து அணியிலிருந்து அஜாஸ் படேல் நீக்கம்

By செய்திப்பிரிவு

கிறிஸ்ட்சர்ச்: இந்திய அணிக்கு எதிராக மும்பை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல், நியூஸிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ஜிம்லேகர், கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்தார்போல் 3-வது வீரர் என்ற சிறப்பைப் பெற்றபோதிலும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணியில் தனது இடத்தை அஜாஸ் படேலால் தக்கவைக்க முடியவி்ல்லை. இவரிடம் இருந்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வேறு என்ன எதிர்பார்க்கிறதோ தெரியவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 13 வீரர்கள் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர்கள் டிரன்ட் போல்ட், டிம் சவுதி, கெயில் ஜேமிஸன், நீல் வேக்னர், மாட் ஹென்ரி, ஆல்ரவுண்டர் டேரல் மிட்ஷெல் ஆகியோர் இருக்கிறார்கள், சுழற்பந்துவீ்ச்சுக்கு ரச்சின் ரவிந்திரா மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி பே ஓவலில் உள்ள மவுன்ட் மவுங்கனியிலும், 2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடக்கின்றன. இரு மைதானங்களுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால், அஜாஸ்படேல் நீக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக வில்லியம்ஸன் இல்லாததால், இந்தத் தொடருக்கு கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில் “ரச்சின், டேரல் இருப்பது அணியில் ஆல்ரவுண்டர் சமநிலையை ஏற்படுத்தும், எங்கள் சூழலுக்கு ஏற்ப சிறந்த கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். வில்லியம்ஸன் இல்லாதது வேதனையாக இருந்தாலும், அவருக்கு போதுமான அளவு ஓய்வு, மனப்புத்துணர்ச்சி ஆகியவை அவசியம்” எனத் தெரிவித்தார்.

நியூஸிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில் “சூழலுக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்யும் கொள்கையைக் கடைபிடித்து வருகிறோம். அந்த அடிப்படையில்தான் அஜாஸ் படேல் நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் மிகப்பெரிய சாதனையை அஜாஸ் படேல் படைத்தார் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நியூஸிலாந்து சூழலுக்கு ஏற்பவே வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

நியூஸி. அணி விவரம்: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளென்டெல், டிரன்ட் போல்ட், டேவன் கான்வே, மாட் ஹென்ரி, கெயில் ஜேமிஸன், டேரல் மிட்ஷெல், ஹென்ரி நிகோலஸ், ரச்சின் ரவிந்திரா, டிம் சவுதி, ரோஸ் டெய்லர், நீல் வேக்னர் மற்றும் வில் யங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

கருத்துப் பேழை

33 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்