கலாச்சாரத்தை காரணம் காட்டி பெண்களின் வளர்ச்சிக்கு தடைபோடக் கூடாது: சானியா மிர்ஸா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கலாச்சாரத்தை காரணம் காட்டி விளையாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு தடைபோடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தெரிவித்தார்.

கோவையில் தனியார் நிறுவனத்தின் கிளை திறப்புக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி 3 கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட 41 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது ஓர் புது அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வியாபாரம் ஆகட்டும், வாழ்க்கை ஆகட்டும் எதுவாக இருந்தாலும் நல்ல துணை அவசியம். இரட்டையர் பிரிவில் அது போன்ற துணை எனக்கு கிடைத்துள்ளது. இந்தியர்களுடன் ஒற்றையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆடி இருக்கிறேன். இருப்பினும், கண்டம் தாண்டி (மார்ட்டினா ஹிங்ஸ்) இணைந்து விளையாடும்போது அது நமக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது.

உலகச் சாதனையை எட்டும் முயற்சியின்போது இடையில் தோல்வி ஏற்பட்டது எதிர்பார்க்காததுதான்.

விளையாட்டில் வெற்றி, தோல்வியை மட்டும் நான் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதேவேளையில் தோல்வி ஏற்படும்போது அடுத்த போட்டியில் தீவிரமான பங்களிப்பை செலுத்த வைத்துள்ளது.

வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டி, சவால் நிறைந்தது என்றாலும் இன்னும் தீவிரமாக, புது யுக்திகளைக் கையாள்வோம். விளையாட்டில் பெண்களின் வளர்ச்சி என்பது முக்கியமானது. கலாச்சாரத்தைக் காரணம் காட்டி வளர்ச்சிக்குத் தடை போடுவதை தவிர்த்தால் நல்லது.

இவ்வாறு தெரிவித்தார் சானியா மிர்சா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

32 mins ago

கல்வி

42 mins ago

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்