ஆர்சிபியின் விசுவாசி; கோலியின் புதிய மைல்கல்: 9 சுவாரஸ்யத் தகவல்கள்

By செய்திப்பிரிவு


ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர விசுவாச வீரரான விராட் கோலி, நேற்று தனது 200-வது போட்டியில் பங்கேற்றார். 200 போட்டிகளும் ஆர்சிபிஅணிக்காகவே கோலி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ வீரர்கள் வரலாம் போகலாம் ஆனால் ஒரு சில வீரர்கள் மட்டுமே அணியில் நிலைபெற்று சூப்பர் ஸ்டார்களாக வர முடியும். அந்த வகையில் விராட் கோலி சிறு வயது முதலே சவாலான வீரர். பல்வேறு தடைகளைக் கடந்து, சோதனைகளைக் கடந்து கிரிக்கெட்டில் தனக்கென இடத்தைப் பிடித்தவர்.

மிகக்குறைந்த வயதிலேயே சச்சின், பாண்டிங் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை உடைத்தெறிந்தவர். உலகிலேயே தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதல் 3 இடங்களில் வைக்கலாம், அந்தஅளவு திறமை கொண்ட பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்சிபி அணிக்காக கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான கோலி, நேற்று தனது 200-வது போட்டியில் பங்கேற்றார். அதுவும், ஒரே அணிக்காகவே 200 போட்டிகளில் பங்ேகற்றமுதல் வீரர், தீவிரவிசுவாச வீரர் கோலி என்பதில் சந்தேகமில்லை.

கோலி குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்

1. 2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கோலி களமிறங்கியது அவரின் 200-வது போட்டியாகும். ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் 5-வது இந்திய வீரர் கோலியாகும். இதற்கு முன் ரோஹித்சர்மா, தோனி, ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் 200 போட்டிகளில் விளையாடியுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு இதே கேகேஆர் அணிக்கு எதிராக களமிறங்கிய கோலி, தனது 200-வது ஆட்டத்திலும் கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார்.

2. ஐபிஎல் தொடரில் ஒரேஅணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் விராட் கோலிதான். சிஎஸ்கே அணிக்காக தோனி 182 போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார்.

3. விராட்கோலி தனது 200 போட்டிகளில் 133 போட்டிகளில் கேப்டனாக ஆர்சிபி அணிக்கு செயல்பட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஆர்சிபி கேப்டன் பொறுப்பேற்ற கோலி, 2013ம் ஆண்டு முழுநேர கேப்டனாக மாறினார். தோனி 196 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

4. கடந்த 2008 முதல் 2016ம் ஆண்டுவரை 129 போட்டிகளில் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக கோலி விளையாடியுள்ளார். 2008ம் ஆண்டில் ஒரு போட்டியிலும் அதன்பின் காயம் காரணமாக 3 போட்டிகள் என 4 போட்டிகளில் மட்டுமே இதுவரை ஆர்சிபி அணிக்காக தலைமை ஏற்காமல் கோலி இருந்துள்ளார்.

5. ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 6,076 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் வீரர், ஒரே வீரரும் கோலி மட்டும்தான். கேப்டனாகவும் இருந்து 132 போட்டிகளில் கோலி 4,674 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

6. ஐபிஎல் தொடரில் இதுவரை கோலி 5 சதங்கள் அடித்து, கெயிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். ஆர்சிபி கேப்டனாக பொறுப்பேற்றபின்புதான் இந்த 5 சதங்களையும் கோலி அடித்துள்ளார், ஐபிஎல் தொடரில் எந்த அணியின் கேப்டனும் ஒரு சதத்துக்கு மேல் அடித்தது இல்லை.

7. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கேப்டன் கோலி இதுவரை38 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார், 33 அரைசதங்களும் இதில் அடங்கும் ஒட்டுமொத்தமாக 45 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். வார்னர் 54 முறையும், தவண் 46 முறையும் அடித்துள்ளனர்.

8. 2016ம் ஆண்டில் விராட் கோலி ஐபிஎல் சீசனில் 973 ரன்கள் சேர்த்து எந்த வீரரும் இதுவரை சேர்க்காத ரன்களுடன் சாதனைபடைத்துள்ளார். டி20 தொடரில் இதுவரை எந்த வீரரும் அடித்திராத ரன்களாகும். 2016ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கோலி 11 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார், இதில் 4 சதங்களும் அடங்கும்.

9. ஆர்பிசி அணியில் கோலி, இதுவரை பிற வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 21 முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். கோலிக்கு அடுத்தார்போல், டேவிட் வார்னர் 24 முறை 100 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் அமைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்