தேசிய கேரம் போட்டியில் தமிழகம் சாம்பியன்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய கேரம் போட்டியில் 11 தங்கப் பதக்கங்களுடன் தமிழகம் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமத்தால் (எஸ்ஜிஎப்ஐ) நடத்தப்படும் 61-வது தேசிய அளவிலான கேரம் போட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 14 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் தமிழகம் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

தனி நபர் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தமிழக வீரர்கள் சி.தினேஷ் தங்கமும், கே.சூரஜ் வெள்ளியும், மாணவிகள் பிரிவில் தமிழகத்தின் எம்.சத்யா தங்கமும், எஸ்.ரோகிணி வெள்ளியும் வென்றனர்.

17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தமிழக வீரர்கள் தினேஷ்பாபு தங்கம், சூரிய பிரஷன் வெள்ளியும், மாணவிகள் பிரிவில் தமிழகத்தின் பி.சினேகா பிரபா தங்கமும் கைப்பற்றினர்.

19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தமிழக வீரர்கள் கே.வெங்கடேஷ் தங்கமும், வி.இளங்கோவன் வெள்ளியும், மாணவிகள் பிரிவில் தமிழகத்தின் கே.நாகஜோதி தங்கமும் வென்றனர்.

மொத்தம் 12 போட்டிகளில் தமிழகம் 11 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதன்மூலம் மாணவர், மாணவிகள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழகம் பெற்றது. பரிசளிப்பு விழாவில் ராமநாதபுரம் எம்.பி. ஏ.அன்வர்ராஜா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்