டாஸ் வென்றது இங்கிலாந்து: இந்திய அணியில் அஸ்வின், இசாந்த் இல்லை

By செய்திப்பிரிவு


நாட்டிங்ஹாமில் இன்று தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்விளையாட உள்ளது.முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட்பிரிட்ஜில் இன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினர். இவர்களுக்குப் பதிலாக பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் லண்டன் வந்துள்ளனர், விரைவில் இந்திய அணியில் இணைவார்கள்.

இந்தப் போட்டியில் ப்ளேயிங் லெவனை எவ்வாறு கோலி தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புநிலவியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் புற்கள் நிறைந்திருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டது. இதற்கு ஏற்றார்போல், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸனும் புற்கள் சிறிது இருந்தால், இந்திய வீரர்கள் புகார் ஏதும் அளி்க்கமாட்டார்கள். ஏனென்றால், இந்தியாவில் அவர்களுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டபோது, அதில் நாங்கள் விளையாடும்போது புகார் ஏதும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்தியஅணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியஅணியில் அஸ்வின், இசாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளனர். இசாந்த்சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்குப் பதிலாக முகமது சிராஜும், அஸ்வினுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோஹித்சர்மா, அடுத்து புஜாரா, கோலி, ரஹானே,ரிஷப்ந்த், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், சிராஜ் என 4 பேர் உள்ளனர்.

இசாந்த் சர்மாவுக்குப் பதிலாக முகமது சிராஜ் கொண்டுவரப்பட்டதைக்கூட ஏற்கலாம் ஆனால், அஸ்வினை நீக்கியதை ஏற்க முடியாது. அஸ்வின் விக்கெட் டேக்கர். கவுண்ட்டி ஆட்டத்தில் கூட அஸ்வின் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.ஜடேஜாவை பெஞ்சில் அமர்த்தி அஸ்வினை சேர்த்திருக்கலாம்.

இங்கிலாந்து அணியில், ரோரி பர்ன்ஸ், டாம் சிப்ளே, ஜாக் கிராளி, ஜோ ரூட், ஜானிபேர்ஸ்டோ, டான் லாரன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஒலே ராபின்ஸன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்ஸன் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்