டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது

By செய்திப்பிரிவு

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக் கெட் தொடர் அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கை, போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 35 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா சூப்பர் 10 பிரிவு 2ல் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் உள்ளன. இவற்றுடன் தகுதி சுற்றில் ஏ பிரிவில் வெற்றி பெறும் அணியும் இணையும்.

முதல் சுற்று போட்டிகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது சுற்றான சூப்பர் 10, மார்ச் 15ம் தேதி தொடங்கு கிறது. சூப்பர் 10 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 15-ம் தேதி, நியூஸிலாந்தை சந்திக்கிறது. 19-ம் தேதி பாகிஸ்தானை தர்மசாலா விலும், 23-ம் தேதி ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடனும், கடை லீக் ஆட்டத்தில் 27-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகி றது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா இரு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது. மார்ச் 10-ம் தேதி கொல்கத்தாவில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனும், 12-ம் தேதி மும்பையில் தென் ஆப்பிரிக்காவுடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

44 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்