மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி : போலீஸ் ஏஎஸ்பியாக நியமனம்; ரயில்வே சார்பில் ரூ.2 கோடி பரிசு

By ஏஎன்ஐ

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டு) நியமித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவி்ட்டார்.

ஒலிம்பிக் போட்டியி்ல் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்புவரை ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராகத்தான் மீராபாய் சானு பணியாற்றி வந்தார். இந்தியாவுக்கு திரும்பும்போது, சானுவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுப்பேன் என்று முதல்வர் பிரேன்சிங் தெரிவித்த நிலையில் விளையாட்டுப்பிரிவி்ல் காவல்கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சானுவுக்கு பரிசு வழங்கிய காட்சி

கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டோக்கியோவிலிருந்து மீராபாய் சானு நேற்று தாயகம் திரும்பினார். மணிப்பூர் சென்ற சானுவுக்கு அந்த மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பு அளிக்க காத்திருக்கின்றனர். அதோடு முதல்வர் பிரேன் சிங்கும் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், “ மீராபாய் சானு தற்போது செய்துவரும் ரயில்வே துறையில் இருக்கும் பணியிலிருந்து விடுவித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவருக்கு மணிப்பூர் அரசு சார்பில் போலீஸ் துறையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டுக்கோட்டா) பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சானு இனிமேல் மணிப்பூர் போலீஸ் துறையில் இணைந்து பணியாற்றலாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்.” எனத் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி சானுவுக்கு பரிசு வழங்கியகாட்சி

இது மட்டும்லாமல் மணிப்பூரைச் சேர்ந்த ஜூடோ பிரிவில் 2014ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியி்ல் வெள்ளி வென்ற லிமாபாம் சுஷிலா தேவி காவலராக பணியாற்றி வந்தார், அவரை காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்த்தி முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டார். மேலும், மணிப்பூர் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 5 வீரர்களுக்கும் தலா ரூ.25 லட்சம்வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்தது

இது தவிர ரயில்வே துறை சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வன் ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் வைஷ்னவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்திாயவுக்கு பெருமை தேடித்தந்த ரயில்வே வீராங்கனை மீராபாய் சானுவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கவுரப்படுத்தும் விதமாக ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும், அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படும். அவரின் திறமையால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்