ஜூரிச் சேலஞ்சர் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் முன்னிலை

By பிடிஐ

ஜூரிச் சேலஞ்சர் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். கடைசி சுற்றை அவர் டிரா செய்தாலே பட்டத்தை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதல் இரு சுற்றுகளில் முறையே ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோரை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த். இந்நிலையில் நேற்று 3வது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவுடனும், 4வது சுற்றில் லத்வியாவின் அலெக்ஸி ஷிரோவுடனும் ஆனந்த் டிரா செய்தார்.

இதன் மூலம் 6 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆனந்த் தனது கடைசி ஆட்டத்தில் ரஷ்யாவின் கிராம்னிக்கை சந்திக்கிறார். இந்த ஆட்டத்தில் அவர் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுகிறார். இந்த ஆட்டத்தை டிராவில் முடித்தாலே விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை வென்றுவிடலாம்.

நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் ஹிகாரு நாகமுரா மற்றும் கிராம்னிக் தலா 5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர்.

ஆரோனியன் 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் கிரி, ஷிரோவ் ஆகியோர் தலா இரண்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்