டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டோக்கியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகள் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளன.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக 8 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ராணு ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீராங்கனைகள் பெயர்ப் பட்டியல் விவரம்:

* ராணி ரம்பால்

* சவிதா
* நிஷா
* நேகா
* சுஷிலா
* நன்ஜோத் கவுர்
* சலிமா
* நவ்னீத்
* வந்தனா
* லால்ரெம்சியாமி
* சர்மிளா
* தேவி
* கட்டாரியா

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர், 1980ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்