பிரெஞ்சு ஓபன் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டென்னிஸ் ராக்கெட்டை சிறுவனுக்கு பரிசாக வழங்கிய ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4 மணி நேரம் 11 நிமிடங்கள் போராடி 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் வெல்லும் 19-வதுகிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதேவேளையில் பிரெஞ்சு ஓபனில் அவர் மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும்.

போட்டி முடிவடைந்ததும் ஜோகோவிச் தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்டை, களத்தில் தன்னை உற்சாகப்படுத்திய சிறுவனுக்கு பரிசாக கொடுத்துஅவனை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக் கினார். இதுகுறித்து ஜோகோவிச் கூறும்போது, “அந்த சிறுவனை எனக்கு தெரியாது. ஆனால் ஆட்டம் முழுவதும் அவர், கூறிக்கொண்டிருந்தது என் காதுகளில்விழுந்து கொண்டிருந்தது. குறிப்பாக நான் முதல் இரு செட்களில் பின்தங்கியிருந்த போது என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். சர்வீஸை வைத்துக் கொள்ளுங்கள், முதல் பந்தை எளிதாக பெறுங்கள், பின்கையை பயன்படுத்துங்கள் என ஆலோசனை கூறினார்.

அவர், எனக்கு பயிற்சி அளித்தார். அது மிக அழகாகவும், அற்புதமாகவும் இருந்தது. அதனால் போட்டி முடிவடைந்ததும் சிறந்தநபராக கருதி அவருக்கு டென்னிஸ் ராக்கெட்டை கொடுக்க விரும்பினேன். என்னை ஆதரித்ததற்கு அது ஒரு வகையான நன்றியாக இருந்தது” என்றார். - ஏஎப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

50 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்