விளையாட்டாய் சில கதைகள்: துணை கேப்டனின் பிறந்த நாள்

By பி.எம்.சுதிர்

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான அஜிங்க்ய ரஹானேவின் பிறந்த நாள் இன்று (ஜூன் 6).

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டத்தில் 1988-ம் ஆண்டு அஜிங்க்ய ரஹானே பிறந்தார். அவரது அப்பா ஒரு போக்குவரத்து தொழிலாளியாக இருந்தார். ரஹானே தனது 7 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தனக்கு அப்போது கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவே இந்த கிளப்பில் தனது பெற்றோர் சேர்த்ததாகவும் பின்னாளில் ஒரு பேட்டியில் ரஹானே கூறியுள்ளார்.

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தாலும், பின்னாளில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுக்க, இந்த பயிற்சி மையம் உதவியது. கிரிக்கெட்டுடன் கராத்தே பயிற்சியிலும் ஈடுபட்ட ரஹானே அதிலும் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.

2002-ம் ஆண்டில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில்ரஹானே இடம்பெற்றார். இதைத்தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோருக் கான அணி, இந்திய அணி என்று அவரது பயணம் தொடர்கிறது. ரஹானேவை ஒரு பொறுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மைதானத்தில் அதிரடி காட்ட அவர் தவறியதில்லை. டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை ரஹானேவுக்கு உண்டு. 2012-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில், விராட் கோலி இல்லாத நிலையிலும், இந்திய அணியின் கேப்டனாக இருந்து தொடரைக் கைப்பற்றிய பெருமை ரஹானேவுக்கு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்