விளையாட்டாய் சில கதைகள்: பார்சிலோனாவில் ஒரு கிரிக்கெட் மைதானம்

By பி.எம்.சுதிர்

பார்சிலோனா என்றதும் நம் மனதுக்கு 2 விஷயங்கள்தான் நினைவுக்கு வரும். முதலாவது விஷயம், பார்சிலோனா கால்பந்து கிளப். அடுத்தது அந்த கால்பந்து கிளப்பின் முன்னணி வீரரான லயோனல் மெஸ்ஸி.

இந்த அளவுக்கு கால்பந்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் பார்சிலோனாவில், ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்நகரில் வசிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள்தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளனர்.

பார்சிலோனாவில் விளையாட்டுத் துறையில் எந்தெந்த வசதிகளையெல்லாம் ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்நகர மக்களிடையே, நகர நிர்வாகம் வாக்கெடுப்பு நடத்தியது. சைக்கிளிங் மைதானம், ரோலார் ஸ்கேட்டிங் மைதானம் உட்பட பல்வேறு மைதானங்களை அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் கிரிக்கெட் மைதானங்களை அமைக்க, பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கால்பந்தின் மண்ணான பார்சிலோனாவில், கிரிக்கெட் தன் வேரை ஊன்றுவதற்கு காரணம், 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பெண்களால் தொடங்கப்பட்ட ஒரு கிரிக்கெட் கிளப். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் இந்த கிரிக்கெட் கிளப்பில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் இங்குள்ள பேஸ்பால் மைதானத்தில் அவர்கள் பயிற்சி பெற்றனர். பின்னர் பேஸ்பால் சீசன் தொடங்கியதும், உள்ளரங்க மைதானம் ஒன்றில் டென்னிஸ் பந்தால் ஆடிப் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர்களின் உற்சாகம் அங்குள்ள மற்றவர்களையும் தொற்றிக்கொள்ள கிரிக்கெட் மீது அந்நகர மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆர்வம்தான் பார்சிலோனாவில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க வாக்களிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது. ஆக விரைவில் கிரிக்கெட்டில் ஸ்பெயின் அணியும் ஆடுவதைப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்