பாட்மிண்டன் தரவரிசையில் ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு

By பிடிஐ

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காந்த் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 9வது இடத்தை பிடித்துள்ளார். பெண் கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா வின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் இறுதி சுற்று போட்டி யில் காந்த் தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த தால் இந்த பின்னடைவை சந்தித் துள்ளார். மற்றொரு இந்திய வீர ரான காஷ்யப் 15வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். பிரணநோய் 20வது இடத்தில் நீடிக்கிறார். அஜய்ராம் ஒரு இடம் முன்னேறி 22வது இடத்தை பிடித்துள்ளார். சீனாவின் ஷென்லாங் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால் 2வது இடத்திலும், பி.வி.சிந்து 12வது இடத்திலும் நீடிக்கின்றனர். இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 13 இடத்தில் உள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி-சுமித் ரெட்டி ஜோடி ஒரு இடம் பின்தங்கி 20வது இடத்தை பிடித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

21 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

48 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

56 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

41 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்