விளையாட்டாய் சில கதைகள்: கவாஸ்கரால் கிடைத்த பெயர்

By பி.எம்.சுதிர்

மேற்கிந்திய தீவுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனின் பிறந்தநாள் இன்று (மே 26).

மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் உள்ள அரிமா என்ற ஊரில் 1988-ம் ஆண்டு சுனில் நரைன் பிறந்தார். அவரது அப்பா, இந்திய கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கரின் தீவிர ரசிகராக இருந்தார். இதனால் தன் மகனுக்கு அவரது நினைவாக சுனில் நரைன் என்று பெயரிட்டார். சுனில் நரைன் தனது 7 வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார்.

மேற்கிந்திய கிரிக்கெட் அணிக்காக தற்போது கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் கெவின் கூப்பரும், சுனில் நரைனும் சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சுனில் நரைனின் வற்புறுத்தலின் பேரிலேயே, கால்பந்து ரசிகராக இருந்த கூப்பர், கிரிக்கெட் விளையாட வந்தார்.

சிறுவயதில் இருந்தே சுழற்பந்து வீச்சில் வல்லவராக சுனில் நரைன் இருந்துவந்தார். ஒரே ஓவரின் 6 பந்துகளையும் வெவ்வேறு வகைகளில் வீசும் ஆற்றல் கொண்டவராக சுனில் நரைன் விளங்கினார். இதனால் உள்ளூர் போட்டிகள் பலவற்றில், அவருக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது.

2011-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே விராட் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். அன்றிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரராக விளங்குகிறார். 2012-ம் ஆண்டில் 7 லட்சம் டாலர்களைக் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுனில் நரைனை வாங்கியது. அன்று முதல் அந்த அணியிலும் முக்கிய அங்கமாக விளங்குகிறார். சிறந்த சுழற்பந்து வீச்சாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், பல போட்டிகளில் அவர் அதிரடி காட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்