‘ஒவ்வொரு தொடருக்கு பிறகும் ஷூவை ஒட்ட முடியவில்லை’ - உதவி கோரிய ஜிம்பாப்வே வீரரின் கோரிக்கையை ஏற்ற பூமா நிறுவனம்

By செய்திப்பிரிவு

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் (27) பர்ல் (27). ஜிம்பாப்வே அணியில் நடுவரிசையில் களமிறங்கி விளையாடும் அவர், இதுவரை 18 சர்வதேச ஒருநாள் போட்டி, 25 சர்வதேச டி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் ரியான் பர்ல் தனது ட்விட்டர் பதிவில், தனது கிழிந்த ஷூ மற்றும் அதனை ஒட்டுவதற்கான பசை, சரி செய்வதற்கான கருவிகள் உள்ளிட்டவற்றை புகைப்படமாக பதிவு செய்திருந்தார். அதில்,“ஒவ்வோரு தொடருக்கு பிறகும் ஷூவை பசையால் ஓட்ட முடியவில்லை. எங்களுக்கு ஸ்பான்சர் வழங்க ஏதாவது ஒரு நிறுவனம் முன்வருமா? அவ்வாறு முன்வந்தால் ஷூவை பசையைக் கொண்டு ஓட்ட வேண்டிய சிரமம் இருக்காது” எனத் தெரிவித்திருந்தார்.

ரியான் பர்லின் உருக்கமான இந்தப் பதிவை பார்த்த பூமா நிறுவனம் உதவி செய்ய முன்வந்துள்ளது.

கோடிகளில் புரளும் கிரிக்கெட் வாரியங்கள் ஒருபுறம் இருக்க ஜிம்பாப்வே அணியோ எந்தவித ஸ்பான்சர்களும் கிடைக்காமல் தள்ளாடி வருகிறது. 1983 உலகக் கோப்பை தொடருக்கு முன்னரே ஜிம்பாப்வே அணி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தை பெற்றிருந்தது. அதேவேளையில் 1992-ல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்ற அந்த அணி நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.

அந்த நாடு ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர், அலைஸ்டர் கேம்பல், டேவ் ஹாக்டன், ஹீத் ஸ்டீரிக், நீல் ஜான்சன் ஆகியோருக்கு பிறகு சிறந்த வீரர்களை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்