டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை

By இரா.முத்துக்குமார்

இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம்.

நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது.

நியூஸிலாந்து அணியின் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர் லாதம் 109 ரன்களையும், கப்தில் 46 ரன்களையும், கேன் வில்லியம்சன் 71 ரன்களையும் டெய்லர் 15 ரன்களையும் எடுக்க கேப்டன் மெக்கல்லம் 6 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 17 ரன்கள் எடுத்தார்.

இதில்தான் அவர் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்து சாதனை புரிந்தார். ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையான 100 சிக்சர்களை அவர் சமன் செய்தார். ஆனால் கில்கிறிஸ்ட் 96 டெஸ்ட் போட்டிகளில் 137 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை அடிக்க, பிரெண்டன் மெக்கல்லம் தனது 98-வது டெஸ்ட் போட்டியில், 170-வது இன்னிங்ஸில் 100-வது சிக்சரை அடித்துள்ளார்.

கில்கிறிஸ்ட் முத்தையா முரளிதரனை தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை அடித்து 100-வது சிக்சர் சாதனையை நிகழ்த்த பிரெண்டம் மெக்கல்லம் ஹெராத் ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து 100 சிக்சர்கள் சாதனையை எட்டிப் பிடித்தார். மெக்கல்லம் 100 சிக்சர்களுக்கு 9,756 பந்துகளைச் சந்திக்க, கில்கிறிஸ்ட் 6,578 பந்துகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் வருமாறு:

ஆடம் கில்கிறிஸ்ட் (100), பிரெண்டன் மெக்கல்லம் (100), கிறிஸ் கெயில் (98), காலிஸ் (97), சேவாக் (91).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

34 mins ago

ஆன்மிகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்